தெலங்கானாவில் கொரோனா மீட்பு விகிதம் 96.99 ஆக உயர்வு


தெலங்கானாவில் கொரோனா மீட்பு விகிதம் 96.99 ஆக உயர்வு
x
தினத்தந்தி 19 Dec 2020 3:25 PM IST (Updated: 19 Dec 2020 3:25 PM IST)
t-max-icont-min-icon

தெலங்கானாவில் கடந்த 24 மணி நேரத்தில் 627 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.


தெலுங்கானா மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தெலங்கானாவில் இன்று  627 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு 2,80,822 ஆக அதிகரித்துள்ளது.மேலும், நோய் தொற்றுக்கு புதிதாக 4 பேர் பலியாகியுள்ளதால், மொத்தமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,510 ஆக அதிகரித்துள்ளது. 

கொரோனா பாதித்து 6,942 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், மொத்தம் 2,72,370 இதுவரை குணமடைந்தனர். நாட்டில் இதுவரை குணமடைந்தோர் விகிதம் 96.99 ஆகவும், இறப்பு விகிதம் 0.53 ஆகவும் அதிகரித்துள்ளது.

Next Story