தேசிய செய்திகள்

மத்தியபிரதேசத்தில் கள்ளச்சாராயம் குடித்த மேலும் 6 பேர் சாவு: பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு + "||" + In Madhya Pradesh 6 more die after drinking counterfeit liquor

மத்தியபிரதேசத்தில் கள்ளச்சாராயம் குடித்த மேலும் 6 பேர் சாவு: பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு

மத்தியபிரதேசத்தில் கள்ளச்சாராயம் குடித்த மேலும் 6 பேர் சாவு: பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு
மத்தியபிரதேசத்தில் கள்ளச்சாராயம் குடித்த மேலும் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.
போபால், 

மத்தியபிரதேச மாநிலம் மொரேனா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில், கள்ளச்சாராயம் பருகிய பலர் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 14 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் 6 பேர் பலியாகினர். இதனால் கள்ளச்சாராய மொத்த சாவு எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது மொரேனா, குவாலியர் மருத்துவமனைகளில் 21 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், இது சம்பந்தமாக 7 பேரை தேடிவருகின்றனர். அவர்கள் ஒவ்வொருவரைப் பற்றியும் தகவல் தெரிவித்தால் தலா ரூ.10 ஆயிரம் சன்மானம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதற்கிடையில் இச்சம்பவம் தொடர்பாக ஓர் உயர்மட்ட குழு கூட்டத்தை நடத்தி ஆலோசித்த முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான், மொரேனா மாவட்ட கலெக்டரையும், சூப்பிரண்டையும் உடனடியாக நீக்க உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: மத்தியபிரதேசத்தில் 60 மணி நேர முழு ஊரடங்கு - இன்று மாலை 6 மணி முதல் அமல்
கொரோனா வைரசை கட்டுப்படுத்த மத்தியபிரதேசத்தில் 60 மணி நேர முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து நகரங்களிலும் இன்று மாலை 6 மணிக்கு இது அமலுக்கு வருகிறது.
2. மத்தியபிரதேசம்: ஆட்டோ மீது பஸ் மோதி விபத்து - 13 பேர் பலி
மத்தியபிரதேசத்தில் ஆட்டோ மீது பஸ் மோதிய விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர்.
3. மத்தியபிரதேசம்: பேருந்து கவிழ்ந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 51 ஆக உயர்வு
மத்திய பிரதேசத்தில் பேருந்து கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் பலியானோர் எண்ணிக்கை 51 ஆக உயர்ந்துள்ளது.
4. மத்தியபிரதேசத்தில் ”எமன்” வேடமணிந்து கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட காவல்துறை அதிகாரி
மத்தியபிரதேசத்தில் காவல்துறை அதிகாரி ஒருவர் எமதர்மராஜா வேடமணிந்து கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
5. மத்தியபிரதேசத்தில் வேன் கவிழ்ந்து விபத்து: 10 பேர் பலி
மத்தியபிரதேசத்தில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்தனர்.