தெலுங்கானாவில் போலீஸ், பாதுகாப்பு படையினருக்கு இன்று முதல் கொரோனா தடுப்பூசி + "||" + Vaccination for police, security force to begin in Telangana today: Health Minister
தெலுங்கானாவில் போலீஸ், பாதுகாப்பு படையினருக்கு இன்று முதல் கொரோனா தடுப்பூசி
தெலுங்கானாவில் போலீஸ், பாதுகாப்பு படையினருக்கு இன்று முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது.
ஐதராபாத்,
தெலுங்கானாவில் இன்று( சனிக்கிழமை) முதல் போலீஸ், பாதுகாப்பு படையினருக்கு தடுப்பூசி போடப்பட உள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை மந்திரி இடலா ராஜேந்தர் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், தெலுங்கானாவில் தடுப்பூசி திட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருகிறது. பிப்ரவரி 6 முதல் போலீஸ், பாதுகாப்பு படையினருக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கும்.
தெலுங்கானாவில் உள்ள சில மருத்துவமனைகளை கொரோனா அல்லாத மருத்துவமனைகளாக மாற்றும் பணி நடந்து வருகிறது. ஏனெனில், மாநிலத்தில் தொற்று பாதிப்பு கணிசமாக குறைந்துவிட்டதால், மருத்துவமனைகளில் அத்தகைய உள்கட்டமைப்பு தேவைப்படாது” என்றார்.