தேசிய செய்திகள்

ஆதிர்ரஞ்சன் குற்றச்சாட்டு: அமித்ஷா திட்டவட்ட மறுப்பு; “நான் தாகூர் நாற்காலியில் அமரவில்லை” + "||" + I didn't sit on Tagore's chair: Amit Shah responds to Adhir Ranjan Chowdhury

ஆதிர்ரஞ்சன் குற்றச்சாட்டு: அமித்ஷா திட்டவட்ட மறுப்பு; “நான் தாகூர் நாற்காலியில் அமரவில்லை”

ஆதிர்ரஞ்சன் குற்றச்சாட்டு: அமித்ஷா திட்டவட்ட மறுப்பு; “நான் தாகூர் நாற்காலியில் அமரவில்லை”
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, சமீபத்தில் மேற்கு வங்காள மாநிலம், சாந்திநிகேதனில் உள்ள விஸ்வபாரதி பல்கலைக்கழகத்திற்கு சென்றிருந்தபோது, ரவீந்திரநாத் தாகூரின் நாற்காலியில் அமர்ந்தார் என்று மக்களவையில் காங்கிரஸ் தலைவர் ஆதிர்ரஞ்சன் சவுத்ரி நேற்று முன்தினம் கூறினார்.
இதை அமித்ஷா நேற்று திட்டவட்டமாக மறுத்தார். இதையொட்டி மக்களவையில் பேசிய அமித்ஷா, “இந்த சபையில் ஆதிர்ரஞ்சன் சவுத்ரி கூறிய குற்றச்சாட்டு தவறானது. நான் ரவீந்திரநாத் தாகூர் நாற்காலியில் அமரவில்லை” என மறுத்தார். “இதற்கு ஆதாரமாக சாந்திநிகேதன் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் எழுதிய கடிதம் உள்ளது. அக்கடிதத்தில், அந்த நினைவுச்சின்னத்துக்கு செல்வோர் அமர்ந்து தங்கள் எண்ணங்களை எழுதுவதற்காக போடப்பட்டுள்ள ஜன்னலோர நாற்காலியில்தான் நான் அமர்ந்தேன் என எழுதப்பட்டுள்ளது” என்றும் குறிப்பிட்டார்.

எனவே ஆதிர்ரஞ்சன் சவுத்ரியின் குற்றச்சாட்டு அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்று அமித்ஷா வேண்டுகோள் விடுத்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. கூர்க்காக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும்; அமித்ஷா வாக்குறுதி
கூர்க்காக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என அமித்ஷா வாக்குறுதி அளித்துள்ளதால், அவர்களுக்கு தனி மாநிலம் வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
2. மதுரை எய்ம்ஸ் தொடர்பான எனது கேள்விகளுக்கு அமித்ஷாவால் பதிலளிக்க முடியவில்லை - உதயநிதி ஸ்டாலின்
மதுரை எய்ம்ஸ் தொடர்பான எனது கேள்விகளுக்கு அமித்ஷாவால் பதிலளிக்க முடியவில்லை என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
3. மதமாற்றத்தில் ஈடுபடுவதாக கன்னியாஸ்திரிகள் ரயிலில் இருந்து இறக்கிவிடப்பட்ட விவகாரம்: உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமித்ஷா உறுதி
உத்தரப் பிரதேசத்தில் ஜான்ஸி நகரில் கன்னியாஸ்திரிகளைத் துன்புறுத்தி பாதியிலேயே இறக்கிவிடப்பட்ட பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
4. அமித்ஷா இன்று நாகர்கோவில் வருகை; பலத்த பாதுகாப்பு ஏற்பாடு
மத்திய மந்திரி அமித்ஷா இன்று (ஞாயிற்றுக்கிழமை) நாகர்கோவில் வருகிறார். அவரது வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
5. மத்திய அரசு நிதியை முறைகேடு செய்தேன் என்பதா? அமித்ஷா மீது அவதூறு வழக்கு தொடருவேன்; புதுச்சேரி முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேட்டி
மத்திய அரசு நிதியை முறைகேடு செய்தேன் எனக்கூறிய அமித்ஷா மீது அவதூறு வழக்கு தொடருவேன் என்று புதுச்சேரி முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.