மத்தியபிரதேசத்தில் ”எமன்” வேடமணிந்து கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட காவல்துறை அதிகாரி


மத்தியபிரதேசத்தில் ”எமன்” வேடமணிந்து கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட காவல்துறை அதிகாரி
x
தினத்தந்தி 11 Feb 2021 4:05 AM GMT (Updated: 11 Feb 2021 4:53 AM GMT)

மத்தியபிரதேசத்தில் காவல்துறை அதிகாரி ஒருவர் எமதர்மராஜா வேடமணிந்து கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

இந்தூர், 

கொரோனாவுக்கு எதிராக இந்தியாவில் கோவேக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்கள வீரர்கள் என சுமார் 3 கோடி பேருக்கு முதற்கட்டமாக இந்த தடுப்பூசி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கடந்த மாதம் 16-ந் தேதி தொடங்கிய இந்த திட்டம் மூலம் தடுப்பூசி போடும் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. நேற்று மாலை 6 மணி வரை நாடுமுழுவதும் 68 லட்சத்து 26 ஆயிரத்து 898 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. இதில் 56,65,172 பேர் சுகாதார பணியாளர்கள் (57.4 சதவீதம்) மற்றும் 11,61,726 பேர் முன்கள வீரர்கள் (13.2 சதவீதம்) ஆவர்.

இந்த நிலையில் மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் காவல்துறை அதிகாரி ஒருவர் எமதர்மராஜா வேடமணிந்து வந்து கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். இது குறித்து அவர் கூறுகையில், ஒவ்வொரு சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்கள வீரர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள முன் வர வேண்டும் என்ற செய்தியை பரப்பவே இவ்வாறு செய்ததாக அவர் கூறினார்.

Next Story