11 வயது மாணவி பாலியல் பலாத்காரம் : தலைமை ஆசிரியருக்கு மரண தண்டனை, ஆசிரியருக்கு ஆயுள் தண்டனை


Image courtesy : timesofindia
x
Image courtesy : timesofindia
தினத்தந்தி 16 Feb 2021 3:46 PM GMT (Updated: 16 Feb 2021 3:46 PM GMT)

ஐந்தாம் வகுப்புப் படித்து வந்த பள்ளி மாணவியை பலாத்காரம் செய்த குற்றத்துக்காக தலைமை ஆசிரியருக்கு மரண தண்டனையும், ஆசிரியருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டு உள்ளது.

பாட்னா

கடந்த 2018-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம்,  பீகார் மாநிலம் புல்வாரி ஷரீப் பகுதியில் இயங்கி வந்த பள்ளிக்கூடம் ஒன்றில் , 5 ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் செய்யபட்டார். உடல்நலக் கோளாறு காரணமாக 11 வயது மானவியை அவரது பெற்றோர் மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்ற போது, அவர் கர்ப்பமாக இருந்தது தெரிய வந்தது.இதையடுத்து, சிறுமியிடம் மருத்துவர்களும் பெற்றோரும் விசாரித்ததில், பள்ளியின் தலைமையாசிரியரும், ஆசிரியரும் இந்தக் குற்றத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதயடுத்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு  கைது செய்யப்பட்டனர்.

இதுகுறித்த வழக்கு  பாட்னா சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் நடந்தது வந்தது. நீதிபதி அவதேஷ் குமார் நேற்று  பிறப்பித்த உத்தரவில், மாணவி பலாத்கார வழக்கில் முக்கியக் குற்றவாளி, பள்ளி தலைமையாசிரியராக இருந்த அரவிந்த் குமாருக்கு தூக்கு தண்டனையும், ஒரு லட்சம் அபராதமும் விதித்துள்ளார். மற்றொரு குற்றவாளியான, ஆசிரியராக இருந்த அபிஷேக் குமாருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

Next Story