தேசிய செய்திகள்

மத்தியபிரதேசம்: பேருந்து கவிழ்ந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 51 ஆக உயர்வு + "||" + Madhya Pradesh: The death toll in a bus accident has risen to 51

மத்தியபிரதேசம்: பேருந்து கவிழ்ந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 51 ஆக உயர்வு

மத்தியபிரதேசம்: பேருந்து கவிழ்ந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 51 ஆக உயர்வு
மத்திய பிரதேசத்தில் பேருந்து கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் பலியானோர் எண்ணிக்கை 51 ஆக உயர்ந்துள்ளது.
போபால், 

மத்தியபிரதேச மாநிலம் சித்தி மாவட்டத்தில் சத்னா நகர் நோக்கி சுமார் 60 பயணிகளுடன் சென்ற ஒரு பஸ் நேற்று முன்தினம் பாட்னா கிராமம் அருகே சென்றபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. பின்னர் சாலையில் இருந்து விலகி அருகில் இருந்த பெரிய கால்வாய்க்குள் கண் இமைக்கும் நேரத்தில் கவிழ்ந்தது. தகவல் அறிந்த மாநில மற்றும் மத்திய பேரிடர் மீட்புக்குழுவினரும், உள்ளூர் போலீசாரும் என மொத்தம் 600-க்கும் மேற்பட்டோர் கால்வாய்க்குள் இறங்கி 47 பேரை பிணமாக மீட்டனர். 

இதனைத்தொடர்ந்து நேற்று மீண்டும் பயணிகளை தேடும்பணி தொடங்கியது. அப்போது ஒரு பெண், 6 மாத பெண் குழந்தை உள்பட 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. இதன்மூலம் பஸ் கவிழ்ந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 51 ஆக உயர்ந்துள்ளது. மேலும் விபத்துக்கு காரணமான பஸ்சின் டிரைவர் போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

இந்த விபத்து குறித்து மத்திய பிரதேச மாநில முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ5 லட்சம் இழப்பீடாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: மத்தியபிரதேசத்தில் 60 மணி நேர முழு ஊரடங்கு - இன்று மாலை 6 மணி முதல் அமல்
கொரோனா வைரசை கட்டுப்படுத்த மத்தியபிரதேசத்தில் 60 மணி நேர முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து நகரங்களிலும் இன்று மாலை 6 மணிக்கு இது அமலுக்கு வருகிறது.
2. மத்தியபிரதேசம்: ஆட்டோ மீது பஸ் மோதி விபத்து - 13 பேர் பலி
மத்தியபிரதேசத்தில் ஆட்டோ மீது பஸ் மோதிய விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர்.
3. மத்தியபிரதேசத்தில் ”எமன்” வேடமணிந்து கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட காவல்துறை அதிகாரி
மத்தியபிரதேசத்தில் காவல்துறை அதிகாரி ஒருவர் எமதர்மராஜா வேடமணிந்து கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
4. மத்தியபிரதேசத்தில் கள்ளச்சாராயம் குடித்த மேலும் 6 பேர் சாவு: பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு
மத்தியபிரதேசத்தில் கள்ளச்சாராயம் குடித்த மேலும் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.
5. மத்தியபிரதேசத்தில் வேன் கவிழ்ந்து விபத்து: 10 பேர் பலி
மத்தியபிரதேசத்தில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்தனர்.

அதிகம் வாசிக்கப்பட்டவை