தேசிய செய்திகள்

ஒடிசாவில் நீதிபதியின் கையெழுத்தை போட்டு மோசடியில் ஈடுபட்ட காவலர் கைது + "||" + Police in Odisha have arrested a man for fraudulently signing a judge

ஒடிசாவில் நீதிபதியின் கையெழுத்தை போட்டு மோசடியில் ஈடுபட்ட காவலர் கைது

ஒடிசாவில் நீதிபதியின் கையெழுத்தை போட்டு மோசடியில் ஈடுபட்ட காவலர் கைது
ஒடிசாவில் கைதிக்கு ஜாமீன் வழங்க நீதிபதியின் கையெழுத்தை போட்டு மோசடியில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
பெர்காம்பூர்,

ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தில் உதவி சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிபவர் சூரிய நாராயணன் பெகரா. இவர் மீது புகுடா கோர்ட்டில் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. சூரிய நாராயணன், தனது உறவினரான பாபுலா பெகரா ஒரு கொலை முயற்சி வழக்கில் கைதானபோது, அவருக்கு ஜாமீன் பெறுவதற்காக, நீதிபதி ஒருவரின் கையொப்பத்தை மோசடியாக பயன்படுத்தி உள்ளார். 

அவர் ஜாமீன் விண்ணப்பத்தை தாக்கல் செய்தபோது, சம்பந்தப்பட்ட நீதிபதி விடுப்பில் இருப்பதும், அவரது கையெழுத்து தவறாக பயன்படுத்தப்பட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, நீதிபதியின் கையெழுத்தை மோசடி செய்த உதவி சப்-இன்ஸ்பெக்டர் மீது, எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஒடிசாவில் விமானத்தில் இருந்து ஏவுகணை சோதனை
ஒடிசாவில் விமானத்தில் இருந்து ஏவுகணையை செலுத்தி வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டது.
2. “ஒடிசாவின் பகுதிகளில் நாங்கள் அத்துமீறவில்லை” - நீதிமன்றத்தில் ஆந்திர அரசு பதில்
ஒடிசாவின் பகுதிகளில் அத்துமீறவில்லை என உச்சநீதிமன்றத்தில் ஆந்திர அரசு பதிலளித்துள்ளது.
3. ஒடிசாவில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட 31 பேருக்கு கொரோனா தொற்று
ஒடிசாவில் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. 9 மாதங்களுக்கு பிறகு பூரி ஜெகந்நாதர் கோவில் திறக்கப்பட்டது; ஜனவரி 3 முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி
கொரோனா தொற்றை தொடர்ந்து ஒடிசாவில் பூரி ஜெகந்நாதர் கோவில் 9 மாதங்களுக்கு பிறகு பக்தர்களுக்காக நேற்று திறக்கப்பட்டது. ஜனவரி 3 முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
5. ஒடிசாவில் பரபரப்பு: யானை மீது மோதி எக்ஸ்பிரஸ் ரெயில் தடம்புரண்டது
ஒடிசாவில் இன்று அதிகாலையில் யானை மீது மோதியதால் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம்புரண்டது.