திட்டமிடப்படாத ஊரடங்கால் ஏற்பட்ட பேரழிவுகள் இன்னும் தேசத்தைப் பிடித்து ஆட்டுவிக்கின்றன - ராகுல்காந்தி குற்றச்சாட்டு + "||" + The unplanned lockdown disaster continues to haunt the country
Rahul Gandhi
திட்டமிடப்படாத ஊரடங்கால் ஏற்பட்ட பேரழிவுகள் இன்னும் தேசத்தைப் பிடித்து ஆட்டுவிக்கின்றன - ராகுல்காந்தி குற்றச்சாட்டு
கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காகக் கொண்டுவரப்பட்ட திட்டமிடப்படாத ஊரடங்கால் ஏற்பட்ட பேரழிவுகள் இன்னும் தேசத்தைப் பிடித்து ஆட்டுவிக்கின்றன என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
நாட்டில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதையடுத்து கடந்த ஆண்டு மார்ச் 24-ம் தேதி முழு ஊரடங்கை மத்திய அரசு கொண்டு வந்தது. கடுமையான கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்பட்ட நிலையில் ஜூன் மாதத்திலிருந்து படிப்படியாக ஊரடங்கு நடவடிக்கைகள் தளர்த்தப்பட்டன.
மத்திய அரசு ஊரடங்கின் நடவடிக்கையைக் கொண்டுவந்தபோது, திட்டமிடாமல் ஊரடங்கைக் கொண்டுவந்துவிட்டது, பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தொடர்ந்து விமர்சித்தார்.
இந்நிலையில் ராகுல் காந்தி டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்காகக் கொண்டுவரப்பட்ட திட்டமிடப்படாத ஊரடங்கால் ஏற்பட்ட பேரழிவுகள் இன்னும் தேசத்தைப் பிடித்து ஆட்டுவிக்கின்றன. மத்திய அரசின் இயலாமை மற்றும் தொலைநோக்குப் பார்வையின்மையால் தண்டிக்கப்பட்ட லட்சக்கணக்கான குடும்பங்களின் விவரிக்க முடியாத வேதனைக்கு நான் இரங்கல் தெரிவிக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தி டுவிட்டரில் பதிவிட்ட இணைப்பில், தெற்கு ஆசியாவில் உள்ள 6 முக்கிய நாடுகளில் இந்தியாவில்தான் கரோனாவால் பச்சிளங் குழந்தைகள் உயிரிழப்பும், பிரசவத்தின்போது குழந்தைகள் இறப்பும் அதிகமாக இருக்கிறது என்ற யுனிசெஃப் நடத்திய ஆய்வின் முடிவு உள்ளது.
The unplanned lockdown disaster continues to haunt the country.
Condolences to the lakhs of families being punished with indescribable pain for GOI’s incompetence & myopia. pic.twitter.com/TBN7mS149W
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்.பி. ஜாய்ஸ் ஜார்ஜ், ராகுல் காந்தி ஏன் பெண்கள் பயிலும் கல்லூரிக்கே செல்கிறார் என்று சர்ச்சைக்குரிய வகையில் கேள்வி எழுப்பியுள்ளார்.
மோடி, அமித்ஷா காலடியில் ஆட்சியாளர்கள் கிடப்பதாகவும், இதை மானமுள்ள தமிழர்கள் ஏற்க மாட்டார்கள் என்றும் சென்னையில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி ஆவேசமாக பேசினார்.