கேரள சட்டசபை தேர்தல்; மத்திய மந்திரி ராஜ்நாத் சிங்கின் பேரணி ரத்து


கேரள சட்டசபை தேர்தல்; மத்திய மந்திரி ராஜ்நாத் சிங்கின் பேரணி ரத்து
x
தினத்தந்தி 28 March 2021 3:49 PM GMT (Updated: 28 March 2021 3:49 PM GMT)

கேரள சட்டசபை தேர்தல் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங்கின் பேரணி ரத்து செய்யப்பட்டு உள்ளது.

திருவனந்தபுரம்,

கேரள சட்டசபைக்கான தேர்தல் வருகிற ஏப்ரல் 6ந்தேதி ஒரே கட்டத்தில் நடைபெற உள்ளது.  14 மாவட்டங்களை கொண்ட 140 உறுப்பினர்களை உள்ளடக்கிய சட்டசபைக்கான தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மே 2ந்தேதி நடைபெறும்.

வருகிற ஜூன் 1ந்தேதியுடன் 14வது கேரள சட்டசபைக்கான பதவி காலம் நிறைவடைகிறது.  15வது சட்டசபைக்கான தேர்தலில் 2 கோடியே 67 லட்சத்து 88 ஆயிரத்து 268 வாக்காளர்கள் ஓட்டு பதிவு செய்து வேட்பாளர்களை தேர்வு செய்கின்றனர்.

இந்த தேர்தலில் முதல் மந்திரி பினராயி விஜயன் தலைமையிலான ஆளும் கம்யூனிஸ்டு கட்சி, பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகளிடையே கடும் போட்டி ஏற்பட்டு உள்ளது.  தேர்தல் நெருங்கும் சூழலில் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக பா.ஜ.க. மூத்த தலைவர் மற்றும் மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் கேரளாவின் எர்ணாகுளம் நகரில் இன்று பொது பேரணி ஒன்றில் கலந்து கொண்டு பிரசாரத்தில் ஈடுபட உள்ளார் என தெரிவிக்கப்பட்டது.  ஆனால் மோசமான வானிலையால் அவரது விமானம் தரையிறங்க முடியவில்லை.  இதனை முன்னிட்டு பேரணியை அவர் ரத்து செய்துள்ளார்.

Next Story