ஒடிசாவில் கடந்த 24 மணி நேரத்தில் 791 பேருக்கு கொரோனா பாதிப்பு

ஒடிசாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,44,647 ஆக அதிகரித்துள்ளது.
ஒடிசாவில் கடந்த 24 மணி நேரத்தில் 791 பேருக்கு கொரோனா பாதிப்பு
Published on

புவனேஸ்வர்,

ஒடிசா மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 791 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,44,647 ஆக அதிகரித்துள்ளது.

ஒடிசாவில் கடந்த 24 மணி நேரத்தில் ஒரு நபர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததையடுத்து, அங்கு மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,923 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் கடந்த 24 மணி நேரத்தில் 266 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.

இதன் மூலம் ஒடிசாவில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,38,416 ஆக அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் தற்போது 4,255 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக ஒடிசா மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com