தேசிய செய்திகள்

கர்நாடக மாநிலத்தில் வேலைநிறுத்தம்: தமிழக பஸ்கள் பெங்களூருவுக்கு இயக்கம் + "||" + The movement of buses in Bangalore Tamil Nadu

கர்நாடக மாநிலத்தில் வேலைநிறுத்தம்: தமிழக பஸ்கள் பெங்களூருவுக்கு இயக்கம்

கர்நாடக மாநிலத்தில் வேலைநிறுத்தம்: தமிழக பஸ்கள் பெங்களூருவுக்கு இயக்கம்
கர்நாடக மாநிலத்தில் அந்த மாநில பஸ் வேலைநிறுத்தம் காரணமாக தமிழக பஸ்கள் பெங்களூருவுக்கு இயக்கப்படுகிறது.
வேலூர், 

கர்நாடகத்தில் அந்த மாநில பஸ் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே கர்நாடக மாநிலத்தில் இருந்து வேலூருக்கு இயக்கப்படும் பஸ்கள் இயங்கவில்லை. ஒரு நாளைக்கு 14 முறை கர்நாடக பஸ்கள் வேலூருக்கு வந்து செல்லும் என்பதால் பயணிகளின் தேவைக்காக வேலூரில் இருந்து ஓசூர் வரை இயக்கப்பட்ட பஸ்கள் தேவைக்கு ஏற்ப கர்நாடக மாநிலத்துக்கு இயக்கப்படுகிறது.

மேலும் வழக்கமாக செல்லக்கூடிய தமிழக பஸ்கள் பெங்களூரு உள்ளிட்ட கர்நாடக மாநில பகுதிகளுக்கு இயக்கப்படுகிறது. கர்நாடகாவில் நடைபெற்று வரும் போராட்டம் காரணமாக வேலூர் பழைய பஸ் நிலையத்தில் உள்ள அந்த மாநில தகவல் மையம் மூடப்பட்டுள்ளது.