தேசிய செய்திகள்

டெல்லியில் குரங்குகளை ஏவி விட்டு நூதன முறையில் பணம் கொள்ளை + "||" + Leaving monkeys in Delhi and robbing money in an innovative way

டெல்லியில் குரங்குகளை ஏவி விட்டு நூதன முறையில் பணம் கொள்ளை

டெல்லியில் குரங்குகளை ஏவி விட்டு நூதன முறையில் பணம் கொள்ளை
டெல்லியில் குரங்குகளை ஏவி விட்டு நூதன முறையில் பணம் கொள்ளையடித்த வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
புதுடெல்லி,

டெல்லியில் போலீசாரிடம் விசித்திர வழக்கு ஒன்று பதிவானது.  கடந்த மார்ச் 2ந்தேதி நபர் ஒருவர் அளித்த புகாரில், குரங்குகளை தன் மீது ஏவி விட்டு தன்னிடம் இருந்த ரூ.6 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது என தெரிவித்து உள்ளார்.

இதுபற்றி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.  அதில், குரங்குகளை பழக்கி அவற்றை பொதுமக்கள் மீது ஏவி விட்டு, அவர்களிடம் இருந்து பணம் திருடும் சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

அவர்கள் வைத்திருந்த 2 குரங்குகளையும் போலீசார் மீட்டனர்.  பின்னர் அவை வனவிலங்கு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.  இந்த வழக்கில் தப்பியோடிய ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.  டெல்லியில் குரங்குகளை வைத்து நூதன முறையில் மக்களிடம் பணம் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ராஜஸ்தான் தினம்; 389 சிறை கைதிகள் விடுதலை
ராஜஸ்தான் தினம் கடைப்பிடிக்கப்படும் நிலையில் ஆயுள் தண்டனை பெற்றவர்கள் உள்பட 389 சிறை கைதிகள் விடுதலை செய்யப்பட்டு உள்ளனர்.