தேசிய செய்திகள்

காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று முதல் யூடியூப் செய்தி சேனல் தொடங்க திட்டம் + "||" + Congress to Launch Digital Media Platform 'INC TV' Today to Convey Its Message Directly to People

காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று முதல் யூடியூப் செய்தி சேனல் தொடங்க திட்டம்

காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று முதல் யூடியூப் செய்தி சேனல் தொடங்க திட்டம்
காங்கிரஸ் கட்சி சார்பில் யூடியூப் செய்தி சேனல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. அந்த சேனலில் இன்று முதல் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
புதுடெல்லி,

காங்கிரஸ் கட்சி சார்பில் யூடியூப் செய்தி சேனல் இன்று தொடங்கப்பட உள்ளது. இந்த செய்தி சேனல் மூலம் காங்கிரஸ் கட்சியின் கொள்கைகள் மற்றும் காங்கிரஸ் கட்சி தெரிவிக்கும் தகவல்கள், கருத்துக்களை பொதுமக்களுக்கு நேரடியாக கொண்டு சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.

'ஐ.என்.சி. டிவி’ என பெயரிடப்பட்டுள்ள அந்த செய்தி சேனலின் துவக்க நிகழ்ச்சி இன்று காலை 11.30 மணிக்கு காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சின் தலைவர்கள் மல்லிகர்ஜூனகார்கே, ரந்தீப் சுர்ஜீவாலா, சுஷ்மிதா தேவ், சீனிவாஸ் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

காங்கிரஸ் கட்சி சார்பில் தொடங்கப்படும் யூடியூப் செய்தி சேனல் அக்கட்சியின் கருத்துக்களை நாடு முழுவதும் கொண்டுசேர்க்க உறுதுணையாக இருக்கும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. காங்கிரஸ் மட்டுமே மூன்றாவது பெரிய கட்சி: சீமானும், கமல்ஹாசனும் தோல்வி அடைந்தவர்கள் - கே.எஸ்.அழகிரி
காங்கிரஸ் மட்டுமே மூன்றாவது பெரிய கட்சி என்றும் சீமானும், கமல்ஹாசனும் தோல்வி அடைந்தவர்கள் என்றும் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
2. ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் இடைத்தேர்தல் வந்தால் மீண்டும் காங்கிரஸ் வேட்பாளர்தான் போட்டியிடுவார்; கே.எஸ்.அழகிரி பேட்டி
சென்னை தண்டையார்பேட்டையில் காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. பலராமனின் 75-வது பிறந்த நாள் விழா நடந்தது.
3. காங்கிரஸ் கட்சி மக்களை பிரித்தாள நினைக்கிறது - அசாமில் அமித்ஷா பிரசாரம்
காங்கிரஸ் கட்சி மக்களை பிரித்தாள நினைக்கிறது என்று அசாமில் இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரம் செய்த அமித்ஷா குறிப்பிட்டார்.
4. தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி ஆட்சி மூலம் புதுச்சேரியிலும் தமிழக திட்டங்கள் நிறைவேற்றப்படும்; தேர்தல் பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் உறுதி
தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி ஆட்சி மூலம் தமிழக திட்டங்கள் புதுச்சேரியிலும் நிறைவேற்றப்படும் என்று தேர்தல் பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் கூறினார்.
5. காங்கிரஸ் மேலிட தலைவருடன் மந்திரி அனில் தேஷ்முக் விவகாரம் குறித்து காங்கிரஸ் மந்திரிகள் ஆலோசனை
காங்கிரஸ் மேலிட தலைவருடன் உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் மீதான குற்றச்சாட்டு குறித்து காங்கிரஸ் மந்திரிகள் ஆலோசனை நடத்தினர்.

அதிகம் வாசிக்கப்பட்டவை