தேசிய செய்திகள்

வேலை இழந்ததால் செக்ஸ் தொழிலில் ஈடுபட்ட கால் சென்டர் ஊழியர்; விவகாரத்து கேட்டு கோர்ட்டில் மனைவி வழக்கு + "||" + call center worker doing call boy job wife shocked

வேலை இழந்ததால் செக்ஸ் தொழிலில் ஈடுபட்ட கால் சென்டர் ஊழியர்; விவகாரத்து கேட்டு கோர்ட்டில் மனைவி வழக்கு

வேலை இழந்ததால் செக்ஸ் தொழிலில் ஈடுபட்ட கால் சென்டர் ஊழியர்; விவகாரத்து கேட்டு கோர்ட்டில் மனைவி வழக்கு
பெங்களூருவில், வேலை இழந்ததால் செக்ஸ் தொழிலில் ஈடுபட்ட கால் சென்டர் ஊழியரிடம் இருந்து விவகாரத்து கேட்டு கோர்ட்டில் அவரது மனைவி வழக்கு தொடர்ந்துள்ளார்.
பெங்களூரு: பெங்களூருவில், வேலை இழந்ததால் செக்ஸ் தொழிலில் ஈடுபட்ட கால் சென்டர் ஊழியரிடம் இருந்து விவகாரத்து கேட்டு கோர்ட்டில் அவரது மனைவி வழக்கு தொடர்ந்துள்ளார்.

வேலையில் இருந்து நீக்கம்

பெங்களூரு நகரில் ஒரு இளம் தம்பதி வசித்து வருகின்றனர். அந்த தம்பதி கடந்த 4 ஆண்டுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டு இருந்தனர். அதாவது அந்த பெண்ணும், கணவரும் ஒரு கால் சென்டர் நிறுவனத்தில் வேலை செய்தனர். அப்போது 2 பேருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அந்த பழக்கம் காதலாக மாறியது. பின்னர் 2 ஆண்டுக்கு முன்பு 2 பேரும் திருமணம் செய்து கொண்டிருந்தனர்.

இதற்கிடையில், கடந்த ஆண்டு(2020) கொரோனா காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட போது, கால்சென்டர் நிறுவனம் வேலையில் இருந்து வாலிபரை நீக்கியதாக கூறப்படுகிறது. வேலையை இழந்த பின்பு அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் வாலிபர் இருந்துள்ளார். இதற்கிடையில், சமீபமாக வாலிபரின் நடவடிக்கையில் அவரது மனைவிக்கு சந்தேகம் ஏற்பட்டது.

செக்ஸ் தொழில்

அவர் தனது மனைவியுடன் சரியாக பேசாமல் இருப்பது, வீட்டுக்கு இரவில் வராமல் இருப்பது என்று இருந்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த இளம்பெண், தனது கணவரின் மடிக்கணினியை எடுத்து பார்த்துள்ளார். அதைப்பார்த்த இளம்பெண் அதிர்ச்சி அடைந்துள்ளார். ஏனெனில், மடிக்கணினியில் ஏராளமான ஆபாச வீடியோக்கள் இருந்துள்ளன. குறிப்பாக தனது கணவர் நிர்வாணமாக இருப்பது, ஏராளமான பெண்களுடன் அவர் ஆபாசமாக இருப்பது உள்ளிட்ட வீடியோக்கள் இருப்பதை இளம்பெண் கண்டுபிடித்திருந்தார்.

இதுபற்றி தன்னுடைய கணவரிடம் அவர் கேட்டுள்ளார். முதலில் மடிக்கணினியில் இருந்த ஆபாச வீடியோக்கள் பற்றி மனைவியிடம் எதுவும் கூற மறுத்து விட்டார். ஆனால் மனைவி வற்புறுத்தி கேட்டதால், தான் செக்ஸ் தொழிலில் ஈடுபட்டு வருவது பற்றி கூறியுள்ளார். இதைக்கேட்ட அவர் மேலும் அதிர்ச்சி அடைந்துள்ளார். அதாவது வேலை இழந்த பின்பு என்ன செய்வது என்று தவித்த அந்த வாலிபர், செக்ஸ் தொழிலில் ஈடுபட்டுள்ளார்.

கணவர் மீது புகார்

இதற்காக பல்வேறு பெண்களுடன் ஆபாசமாக இருப்பது, அவர் நிர்வாணமாக இருப்பது என்று இருந்துள்ளார். இதற்காக அவருக்கு குறிப்பிட்ட அளவு பணம் கிடைத்துள்ளது. இதையடுத்து, அந்த தொழிலை விட்டுவிடும்படி கணவரிடம் அந்த இளம்பெண் கூறி இருக்கிறார். ஆனால் அவர் அந்த தொழிலை கைவிட மறுத்து விட்டதாக தெரிகிறது. இதையடுத்து, நடந்த சம்பவங்கள் பற்றி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள மகளிர் உதவி மையத்தில் இளம்பெண் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் தம்பதியை அழைத்து விசாரணை நடத்தினார்கள்.

அவர்களுக்கு பல்வேறு அறிவுரைகளையும் போலீசார் வழங்கினார்கள். ஆனாலும் இளம்பெண்ணும், வாலிபரும் சமாதானம் அடையவில்லை என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் செக்ஸ் தொழிலில் அந்த வாலிபர் தொடர்ந்து ஈடுபடுவதால், அவருடன் வாழ பிடிக்காமல் விவாகரத்து கேட்டு கோர்ட்டில் அந்த பெண் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.