தேசிய செய்திகள்

கொரோனா பரவல் அதிகரிப்பு; கேரளாவில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு + "||" + Kerala Imposes Night Curfew; Tuition Centres To Remain Closed

கொரோனா பரவல் அதிகரிப்பு; கேரளாவில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு

கொரோனா பரவல் அதிகரிப்பு; கேரளாவில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு
கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து இருப்பதால் கேரளாவில் இன்று இரவு முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.
திருவனந்தபுரம்,

கேரளாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ள நிலையில், ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இரவு ஊரடங்கின் போது அத்தியாவசிய சேவைகள், பணிகளுக்கு மட்டுமே  அனுமதி அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இரவு 7.30 மணிக்கே வணிக வளாகங்கள், மால்கள், தியேட்டர்கள் ஆகிய்வை மூடப்பட வேண்டும் என்றும் கேரள அரசின்  உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டியூஷன் மற்றும் கோச்சிங் செண்டர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே வகுப்புகளை நடத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காக பிரான்சில் இருந்து ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளை இறக்குமதி செய்யும் நடிகர் சோனு சூட்
நடிகர் சோனு சூட் கொரோனா நோயளிகளின் சிகிச்சைக்காக பிரான்சில் இருந்து 4 ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளை இறக்குமதி செய்ய உள்ளார்.
2. கொரோனா தாக்குதலுக்கு ரெயில்வே ஊழியர்கள் 1,952 பேர் உயிரிழப்பு
இந்தியாவில் தினமும் சராசரியாக 1,000 ரெயில்வே ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. கொரோனா குறித்து விவாதிக்க பாராளுமன்ற சிறப்புக்கூட்டத்தொடர் நடத்த வேண்டும் - சபாநாயகருக்கு காங்கிரஸ் எம்.பி. கடிதம்
கொரோனா பரவல் குறித்து விவாதிக்க பாராளுமன்ற சிறப்புக்கூட்ட்த்தொடர் நடத்த வேண்டும் என்று மக்களவை சபாநாயகருக்கு காங்கிரஸ் எம்.பி. கடிதம் எழுதியுள்ளார்.
4. மராட்டியத்தில் இன்று வெகுவாக குறைந்த கொரோனா பாதிப்பு
மராட்டியத்தில் இன்று 37 ஆயிரத்து 236 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. கேரளாவில் இன்று 27 ஆயிரம் பேருக்கு கொரோனா - 65 பேர் பலி
கேரளாவில் இன்று 27 ஆயிரத்து 487 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.