தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர் ராவ் கொரோனா தொற்றால் பாதிப்பு

தெலுங்கானா முதல் மந்திரி சந்திர சேகர் ராவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர் ராவ் கொரோனா தொற்றால் பாதிப்பு
Published on

ஐதராபாத்,

தெலுங்கானா முதல் மந்திரி கே சந்திர சேகர் ராவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான அறிகுறிகள் சந்திர சேகர் ராவுக்கு இருப்பதாகவும் மருத்துவர்கள் அவரது உடல் நிலையை கண்காணித்து வருவதாகவும் தெலுங்கானா முதல் மந்திரி சோமேஷ் குமார் இந்தத் தகவலை தெரிவித்தார்.

தெலுங்கானாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,009- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பால் 14 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்புடன் 39,154- பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com