தேசிய செய்திகள்

இரவில் நிர்வாணமாக தூங்க கூறி இளம்பெண்ணுக்கு தொல்லை- கணவர் மீது வழக்கு + "||" + Harassment of teenager claiming to sleep naked at night

இரவில் நிர்வாணமாக தூங்க கூறி இளம்பெண்ணுக்கு தொல்லை- கணவர் மீது வழக்கு

இரவில் நிர்வாணமாக தூங்க கூறி இளம்பெண்ணுக்கு தொல்லை- கணவர் மீது வழக்கு
பெங்களூருவில், இரவில் நிர்வாணமாக தூங்கும்படி இளம்பெண்ணுக்கு தொல்லை கொடுத்த கணவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
பெங்களூரு:

நிர்வாணமாக தூங்க...

  பெங்களூரு காடுகோடி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட ஷீகஹள்ளியில் வசித்து வருபவர் அபினாஷ். இவருக்கும் பெங்களூரு புறநகர் மாவட்டம் தேவனஹள்ளியை சேர்ந்த 22 வயது இளம்பெண்ணுக்கும், கடந்த 2019-ம் ஆண்டு திருமணம் நடந்து இருந்தது. திருமணம் முடிந்த 3 மாதம் தம்பதியினர் சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர். அதன்பின்னர் இளம்பெண்ணை, அபினாஷ் அடித்து, உதைத்து கொடுமைப்படுத்தி வந்ததாக தெரிகிறது.

  மேலும் இரவு நேரங்களில் செல்போனில் ஆபாச வீடியோவை பார்க்கும்படியும், அந்த வீடியோவில் வரும் காட்சிகள் போல தன்னுடன் உடலுறவில் ஈடுபட வேண்டும் என்றும், இரவு முழுவதும் நிர்வாணமாக தூங்க வேண்டும் என்றும் இளம்பெண்ணுக்கு அபினாஷ் தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது. இதற்கு மறுத்த இளம்பெண்ணை, அபினாஷ் அடித்து, உதைத்து கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் குடிநீருக்கு பதிலாக சிறுநீரை குடிக்க வேண்டும் என்று இளம்பெண்ணை, அபினாஷ் வற்புறுத்தி வநததாக சொல்லப்படுகிறது.

விவகாரத்து பெற முடிவு

  இதனால் மனம் உடைந்த இளம்பெண் அபினாஷ் செய்து வரும் கொடுமைகள் பற்றி அவரது தாயிடம் தெரிவித்து உள்ளார். ஆனால் இளம்பெண்ணை திட்டிய அபினாசின் தாய், எனது மகன் கூறியபடி நடந்து கொள்ள வேண்டும் என்று கூறியதாக தெரிகிறது. இதனால் சம்பவம் குறித்து இளம்பெண் தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுதார். இதனை கேட்டு அதிா்ந்த இளம்பெண்ணின் பெற்றோர் அபினாஷ் மற்றும் அவரது தாய் மீது காடுகோடி போலீசில் புகார் அளித்தனர்.

  அந்த புகாரின்பேரில் அபினாஷ், அவரது தாய் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தவும் போலீசார் முடிவு செய்தனர். இதற்கிடையே அபினாசிடம் இருந்து விவகாரத்து பெற இளம்பெண் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யவும் முடிவு செய்து உள்ளார்.