தேசிய செய்திகள்

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் எத்தனை பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது? மத்திய சுகாதாரத்துறை விளக்கம் + "||" + Only 2-4 infections per 10k found in those vaccinated

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் எத்தனை பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது? மத்திய சுகாதாரத்துறை விளக்கம்

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் எத்தனை பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது? மத்திய சுகாதாரத்துறை விளக்கம்
இந்தியாவில் கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய இரு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.
புதுடெல்லி,

கொரோனாவுக்கு எதிரான உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியாவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் 13 கோடிக்கும் மேற்பட்ட கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களில் எத்தனை பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்ற விவரத்தை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.  

ஐசிஎம்.ஆர் இயக்குநர் பல்ராம் பார்கவா செய்தியாளர்களுக்குப் பேட்டி அளிக்கையில் இது பற்றிய தரவுகளை வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-  கோவேக்சின் தடுப்பூசி இதுவரை 1.1 கோடி பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. இதில் 93,56,436 பேருக்கு  முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. இவர்களில்   4,208 (0.04%) பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.  அதேபோல், 17,37,178- பேருக்கு இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்ட பின்னர் 698- (0.04%) பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 

கோவிஷீல்டு தடுப்பூசியை பொறுத்தவரை முதல் டோஸை 10,03,02,745- பேர் செலுத்திக்கொண்டனர்.இதில் 17,145 (0.02%) பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இரண்டாவது டோஸை 1, 57,32,754-பேர் செலுத்தியுள்ளனர். இவர்களில் 5,014 (0.03%) பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களில் 21 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்பு என்பது மிகவும் குறைவான அளவுதான். யாரும் கவலைப்பட தேவையில்லை” என்றார்.


தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு சற்று குறைந்தது
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 68 ஆயிரத்து 147- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. 200 பேருக்கு கொரோனா தடுப்பூசி
அழகப்பா பல்கலைக்கழகத்தில் 200 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.
3. நாடு முழுவதும் தட்டுப்பாடு எதிரொலி; 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதில் சிக்கல்; தமிழகம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்கள் போதிய அளவுக்கு கையிருப்பு இல்லை என்று அறிவிப்பு
நாடு முழுவதும் தட்டுப்பாடு காரணமாக 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை இன்று தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழகம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்கள் கையிருப்பு இல்லை என்று அறிவித்துள்ளன.
4. ஈரோடு மாவட்டத்துக்கு கூடுதலாக 8,500 கொரோனா தடுப்பூசி- கலெக்டர் கதிரவன் தகவல்
ஈரோடு மாவட்டத்துக்கு கூடுதலாக 8 ஆயிரத்து 500 கொரோனா தடுப்பூசி வரப்பெற்று உள்ளதாக கலெக்டர் கதிரவன் தெரிவித்து உள்ளார்.
5. சேலம் மாவட்டத்துக்கு மேலும் 19,100 கொரோனா தடுப்பூசி மருந்துகள்
சேலம் மாவட்டத்துக்கு மேலும் 19,100 கொரோனா தடுப்பூசி மருந்துகள் வந்தன