மேற்கு வங்காள 6 ம் கட்ட தேர்தல் 3 .30 மணி நிலவரப்படி 70.42% வாக்குகள் பதிவு


படம்:  ANI
x
படம்: ANI
தினத்தந்தி 22 April 2021 11:18 AM GMT (Updated: 22 April 2021 12:37 PM GMT)

மேற்கு வங்காளத்தில் 6 ம் கட்டமாக நடைபெற்று வரும் தேர்தலில் 3.30 மணி நிலவரம் குறித்து தேர்தல் ஆணையம் தகவல் வெளியிட்டு உள்ளது.


கொல்கத்தா

294 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்காள சட்டசபைக்கு 8 கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படுகிறது. ஏற்கெனவே 5 கட்டத் தேர்தல் முடிந்துள்ள நிலையில், இன்று ஆறாம் கட்டமாக 4 மாவட்டங்களைச் சேர்ந்த 43 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்தத் தொகுதிகளில் 27 பெண்கள் உட்பட 306 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். பொதுமக்கள் காலை முதலே வாக்குச்சாவடிகளில் வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மத்தியப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். காலை ஒன்பதரை மணி நிலவரப்படி 17.19  சதவீத  வாக்குகள் பதிவாகியுள்ளது.

மதியம் 1.37 மணி நிலவரம்  குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தகவலின்படி 57.30 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. 3.30 மணி நிலவரப்படி 70.42 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

Next Story