தேசிய செய்திகள்

சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 16,750 பேருக்கு கொரோனா + "||" + Corona positive for 16,750 people in the last 24 hours in Chhattisgarh

சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 16,750 பேருக்கு கொரோனா

சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 16,750 பேருக்கு கொரோனா
சத்தீஸ்கர் மாநிலத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,05,568 ஆக அதிகரித்துள்ளது
ராய்பூர்,

சத்தீஸ்கர் மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 16,750 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,05,568 ஆக அதிகரித்துள்ளது.

அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 197 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதனால் சத்தீஸ்கர் மாநிலத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6,674 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் கடந்த 24 மணி நேரத்தில் 236 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். மாநிலம் முழுவதும் தற்போது 1,21,555 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சத்தீஸ்கர் மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர்ந்து அதிகரிப்பு: கொரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 905 பேர் பாதிப்பு; 7 பேர் உயிரிழந்தனர்
திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொடர் அதிகரிப்பால், கொரோனா தொற்றுக்கு நேற்று 905 பேர் பாதிக்கப்பட்டனர்.
2. திருவள்ளூர் நகராட்சி பகுதிகளில் கொரோனா நடமாடும் தடுப்பூசி சிறப்பு முகாம்; நகராட்சி ஆணையர் நேரில் ஆய்வு
திருவள்ளூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதை தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு கட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
3. கொரோனாவில் இருந்து தப்பிக்க பூஜா ஹெக்டே யோசனை
தமிழில் முகமூடி படத்தில் அறிமுகமான பூஜா ஹெக்டே, தற்போது விஜய் ஜோடியாக புதிய படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் பூஜா ஹெக்டேவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார்.
4. பிரபல இந்தி நடிகர் ரன்தீர் கபூருக்கு கொரோனா
கொரோனா 2-வது அலை நாடு முழுவதும் வேகமாக பரவி லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். ஆயிரக்கணக்கான உயிர்ப்பலிகளும் நடக்கின்றன. நடிகர், நடிகைகளும் கொரோனா தொற்றில் சிக்குகிறார்கள்.
5. கொரோனா பரவல் சூழலில் நாளை ஓட்டு எண்ணிக்கை: தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு வாக்கு எண்ணும் மையங்களில் கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு
கொரோனா பரவல் சூழலில் தமிழக சட்டமன்ற தேர்தல் ஓட்டு எண்ணிக்கை நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.