டெல்லி மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் டேங்கர்கள் விரைந்தன


டெல்லி மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் டேங்கர்கள் விரைந்தன
x
தினத்தந்தி 23 April 2021 4:46 AM GMT (Updated: 23 April 2021 4:49 AM GMT)

ஆக்சிஜன் 2 மணி நேரத்துக்கு மட்டுமே இருப்பதால் 60 நோயாளிகள் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு இருப்பதாக டெல்லி கங்காராம் மருத்துவமனை தெரிவித்து இருந்தது.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா வைரசின் 2-வது அலை மிகக்கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 3.30 லட்சத்திற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 

உலக அளவில் ஒருநாளில் ஏற்பட்ட உச்ச பாதிப்புகளில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது. கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பால் நாடு முழுவதும் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளது. 

குறிப்பாக டெல்லியில் உள்ள கங்காராம், மேக்ஸ் ஆகிய மருத்துவமனைகள் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், சில மணி நேரங்களுக்கே ஆக்சிஜன் சப்ளை செய்ய முடியும் என கூறியிருந்தன. 

இந்த நிலையில், கங்காராம் மருத்துவமனை மற்றும் டெல்லி மேக்ஸ் மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் டேங்கர்கள் லாரிகள் விரைந்துள்ளன. இதனால் மருத்துவர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.

Next Story