17 பிராந்திய மொழிகளில் புதிய தேசிய கல்விக்கொள்கை மொழிபெயர்ப்பு - தமிழுக்கு இடமில்லை


17 பிராந்திய மொழிகளில் புதிய தேசிய கல்விக்கொள்கை மொழிபெயர்ப்பு - தமிழுக்கு இடமில்லை
x
தினத்தந்தி 24 April 2021 1:59 PM GMT (Updated: 24 April 2021 1:59 PM GMT)

புதிய தேசிய கல்விக்கொள்கை 17 பிராந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அதில் தமிழ் இடம்பெறவில்லை.

புதுடெல்லி,

கஸ்தூரி ரங்கன் கல்விக்குழு தாக்கல் செய்த கல்விக்கொள்கையை அடிப்படையாக வைத்து 2020-ல் புதிய தேசிய கல்விக்கொள்கை உருவாக்கப்பட்டது. இந்த புதிய கல்விக்கொள்கைக்கு மத்திய அமைச்சரவை கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஒப்புதல் அளித்தது. இந்த புதிய கல்விக்கொள்கையை தற்போது நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

இதற்கிடையில், தொடக்கத்தில் புதிய தேசிய கல்விக்கொள்கை வெளியிடப்பட்ட போது அது ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய இரு மொழிகளில் மட்டுமே வெளியிடப்பட்டது. இதற்கான பிராந்திய மொழிப்பெயர்ப்புகள் பின்னர் வெளியிடப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில், 17 பிராந்திய மொழிகளில் புதிய தேசிய கல்விக்கொள்கை மொழிபெயர்ப்பு இன்று வெளியிடப்பட்டது. கன்னடம், மலையாளம், தெலுங்கு, கொங்கணி, குஜராத்தி, காஷ்மீரி, நேபாளி, ஒடியா, அசாம், பெங்காலி, போடோ, மராத்தி, பஞ்சாபி, டோக்ரி, மைதிலி, மணிப்புரி, சந்தாலி ஆகிய 17 மொழிகளில் தேசிய கல்விக்கொள்கை மொழிப்பெயர்க்கப்பட்டு வெளியாகியுள்ளது. ஆனால், இதில் தமிழ் மொழிக்கான மொழிப்பெயர்ப்பு இடம்பெறவில்லை.

Next Story