தேசிய செய்திகள்

மராட்டிய மாநிலத்தில் கொரோனா பாதித்த 2 கைதிகள் தப்பி ஓட்டம் - 4 போலீசார் பணி இடைநீக்கம் + "||" + 2 prisoners affected by corona escaped in Mahatashtra - 4 police suspended

மராட்டிய மாநிலத்தில் கொரோனா பாதித்த 2 கைதிகள் தப்பி ஓட்டம் - 4 போலீசார் பணி இடைநீக்கம்

மராட்டிய மாநிலத்தில் கொரோனா பாதித்த 2 கைதிகள் தப்பி ஓட்டம் - 4 போலீசார் பணி இடைநீக்கம்
தானேவில் கொரோனா பாதித்த 2 கைதிகள் தப்பி ஓடியதையடுத்து, பணியில் அலட்சியமாக இருந்த 4 போலீசார் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
தானே,

மராட்டிய மாநிலம் தானேவில் உள்ள கல்யாண் ஆதார்வாடி சிறையில் இருக்கும் கைதிகளுக்கு அண்மையில் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இச்சோதனையில் 30 கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனை தொடர்ந்து கொரோனா பாதித்த நோயாளிகள் சிலர் பிவண்டி கொரோனா சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இதற்காக அங்கு 4 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். நேற்று முன்தினம் 2 கைதிகள் அதிகாலை 4.30 மணி அளவில் 15-வது மாடியில் உள்ள கழிவறைக்கு சென்றனர். இதன்பின் அவர்கள் திரும்பி வரவில்லை. இது பற்றி அறிந்த போலீசார் அங்கு சென்று தேடிப்பார்த்த போது 2 கைதிகள் தப்பி சென்றது தெரியவந்தது.

இந்த நிலையில் பணியில் அலட்சியமாக இருந்த 4 போலீசார் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர். மேலும் தப்பி சென்ற கொரோனா பாதித்த 2 கைதிகளை பிடிக்க கோன்காவ் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மராட்டிய மாநிலத்தில் இன்று 26,672 பேருக்கு கொரோனா
மராட்டிய மாநிலத்தில் தற்போது 3,48,395 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2. மராட்டியத்தில் இன்று 51,457 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தனர்
மராட்டிய மாநிலத்தில் இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 49,78,937 ஆக உயர்ந்துள்ளது.
3. மராட்டிய மாநிலத்தில் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு கொரோனா நிவாரணம் ரூ.108 கோடி ஒதுக்கீடு
கொரோனா கட்டுப்பாடுகளால் வாழ்வாதாரம் இழந்த ஆட்டோ டிரைவர்களுக்கு ரூ.108 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக அரசு அதிகாரி கூறியுள்ளார்.
4. மராட்டிய மாநிலத்தில் இன்று 51,880 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
மராட்டிய மாநிலத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 48,22,902 ஆக அதிகரித்துள்ளது.
5. மராட்டிய மாநிலத்தில் இன்று முதல் ரெம்டெசிவிர் மருந்து உற்பத்தி தொடங்க வாய்ப்பு - மத்திய மந்திரி நிதின் கட்காரி தகவல்
மராட்டிய மாநிலம் வார்தாவில் இன்று முதல் ரெம்டெசிவிர் உற்பத்தி தொடங்க வாய்ப்பு உள்ளதாக மத்திய மந்திரி நிதின் கட்காரி கூறியுள்ளார்.