கொரோனா பரவல் சவாலாக எழுந்துள்ளது; பொதுமக்களுக்கு தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்; தொண்டர்களுக்கு ஆர்.எஸ்.எஸ். வலியுறுத்தல்

ஆர்.எஸ்.எஸ். அகில இந்திய பொதுச்செயலாளர் தத்தாத்ரேயா ஹோசபாலே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கொரோனா பரவல் சவாலாக எழுந்துள்ளது; பொதுமக்களுக்கு தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்; தொண்டர்களுக்கு ஆர்.எஸ்.எஸ். வலியுறுத்தல்
Published on

நம் நாட்டில் கொரோனா தொற்று மீண்டும் மிகப்பெரிய சவாலாக எழுந்துள்ளது. தொற்றின் வேகமும், தீவிரமும் இம்முறை கடுமையாக உள்ளது. நாட்டின் பல பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. அதிகப்படியான மக்கள் தொற்றுக்கு ஆளாகி, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். நூற்றுக்கணக்கான குடும்பங்கள் தங்கள் அன்பானவர்களை இழந்துள்ளனா. இந்த பேரிடரால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஆர்.எஸ்.எஸ். தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்து கொள்கிறது.

ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் நாடு முழுவதும் கொரோனா நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து சேவை பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன்படி, முக கவசம் அணிதல், சமூக இடைவெளி, சுகாதாரம், கூட்டம் சேராமை, ஆயுர்வேத பானங்கள், ஆவி பிடித்தல், தடுப்பூசி போன்றவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். சமூக வலைத்தளங்களில் இருப்போர், கட்டுப்பாட்டுடனும், விழிப்புடனும் இருந்து நல்ல விஷயங்களை எடுத்து செல்ல வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com