தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா ஒருநாள் பாதிப்பு 3.50 லட்சத்தை நெருங்கியது + "||" + India reports 3,49,691 new #COVID19 cases, 2,767 deaths and 2,17,113 discharges in the last 24 hours, as per Union Health Ministry

இந்தியாவில் கொரோனா ஒருநாள் பாதிப்பு 3.50 லட்சத்தை நெருங்கியது

இந்தியாவில் கொரோனா ஒருநாள் பாதிப்பு 3.50 லட்சத்தை நெருங்கியது
இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக ஒருநாள் கொரோனா பாதிப்பு 3.50 லட்சத்தை நெருங்கியது.
புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா வைரசின் 2-வது அலை காட்டுத்தீ போல பரவி வருகிறது. கொரோனா வைரசால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை தினம் தினம் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. 

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 3 லட்சத்து 49 ஆயிரத்து 691- பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால்  இதுவரை இல்லாத அளவாக இன்று 2,767-பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று பாதிப்பில் இருந்து நேற்று குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 17 ஆயிரத்து 113- ஆக உள்ளது. 

நாட்டில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 கோடியே 69 லட்சத்து 60 ஆயிரத்து 172- பேர் ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 1 கோடியே 40 லட்சத்து 85 ஆயிரத்து 110- ஆக அதிகரித்துள்ளது. 

கொரோனாவுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை  1 லட்சத்து 92 ஆயிரத்து 311- ஆக உயர்ந்துள்ளது. தொற்றுக்கு சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 26 லட்சத்து 82 ஆயிரமாக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. அந்தியூர், அம்மாபேட்ைட பகுதியில் தொழில் அதிபர் உள்பட 5 பேர் கொரோனாவால் சாவு- பல்வேறு பகுதிகளில் 52 பேருக்கு நோய் தொற்று
அந்தியூர், அம்மாபேட்டை பகுதியில் தொழில் அதிபர் உள்பட 5 பேர் கொரோனாவால் இறந்தார்கள். மேலும் பல்வேறு பகுதிகளில் 52 பேருக்கு நோய் தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.
2. இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 3-வது நாளாக குறைவு
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 57 ஆயிரத்து 229- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளில் சேரும் குப்பைகளை சேகரிக்க மஞ்சள் நிற பிளாஸ்டிக் பை; மாநகராட்சி சார்பில் வழங்கப்படுகிறது
கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளில் சேரும் குப்பைகளை சேகரிக்க மாநகராட்சி சார்பில் மஞ்சள் நிற பிளாஸ்டிக் பை வழங்கப்பட உள்ளது.
4. அம்மாபேட்டை பகுதியில் வேகமாக பரவி வரும் கொேரானா தொற்று; சமூக இடைவெளி- முககவசத்தை மறந்த மக்கள்
அம்மாபேட்டை பகுதியில் சமூக இடைவெளி-முககவசத்தை மக்கள் கடைப்பிடிக்க மறந்ததால் கொரோனா தொற்று வேகமாக பரவிவருகிறது.
5. அந்தியூர், கொடுமுடி, தாளவாடி பகுதியில் கணவன்-மனைவி, 2 வயது குழந்தை உள்பட 71 பேருக்கு கொரோனா
அந்தியூர், கொடுமுடி, தாளவாடி பகுதியில் கணவன்-மனைவி, 2வயது குழந்தை உள்பட 71 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.