தேசிய செய்திகள்

திரிணாமூல் காங்கிரஸ் வேட்பாளர் கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு + "||" + TMC candidate from Khardaha, Kajal Sinha, passes away due to #COVID19

திரிணாமூல் காங்கிரஸ் வேட்பாளர் கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு

திரிணாமூல் காங்கிரஸ் வேட்பாளர் கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு
மேற்கு வங்கத்தின் கர்தாஹா சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்ட காஜல் சின்ஹா கொரோனா தொற்று ஏற்பட்டு இன்று உயிரிழந்தார்.
கொல்கத்தா, 

294- தொகுதிகளை கொண்ட மேற்கு வங்காளத்தில் சட்டப்பேரவை 8 கட்டங்களாக நடைபெற்று வருகிறது.  கடந்த  22ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்ற கர்தாஹா தொகுதியில் திரிணமூல் காங்கிரஸ் சார்பில் காஜல் சின்ஹா போட்டியிட்டார். இந்த நிலையில்,  காஜல்  சின்ஹா அண்மையில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புக்கு உள்ளானர். 

இதையடுத்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காஜல் சின்ஹா, தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனளிக்காமல் இன்று உயிரிழந்தார். காஜல் சின்ஹா மறைவுக்கு மேற்கு வங்க முதல்வரும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி இரங்கல் தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் ஒரே நாள் கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை தாண்டியது; 2,104 பேர் உயிரிழப்பால் மக்கள் சோகம்
இந்தியாவில் ஒரே நாளில் 3.14 லட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது உலகளாவிய உச்சம் என பதிவாகி உள்ளது. 2,104 பேர் இந்த வைரசால் உயிரிழந்திருப்பது மக்களை சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
2. கர்நாடகாவில் 25 ஆயிரத்தை தாண்டிய ஒருநாள் கொரோனா பாதிப்பு
கர்நாடகாவில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக இன்று 25,795 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. நாளுக்கு நாள் வேகமாக பரவும் தொற்று: தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 12 ஆயிரத்தை தாண்டியது
தமிழகத்தில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக இன்று புதிதாக 12,652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. கேரளாவில் இதுவரை இல்லாத அளவுக்கு கொரோனா பாதிப்பில் புதிய உச்சம்
கேரளாவில் இதுவரை இல்லாத அளவாக இன்று கொரோனா பாதிப்பு புதிய உச்சம் தொட்டுள்ளது.
5. கர்நாடகாவில் தினசரி கொரோனா பாதிப்பு 23 ஆயிரத்தை தாண்டியது
கர்நாடகாவில் இன்று 23,558 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.