கர்நாடகாவில் தினசரி கொரோனா பாதிப்பு 35 ஆயிரத்தை நெருங்கியது + "||" + Karnataka reports 34,804 fresh COVID-19 cases, 6,982 recoveries, and 143 deaths in the last 24 hours
கர்நாடகாவில் தினசரி கொரோனா பாதிப்பு 35 ஆயிரத்தை நெருங்கியது
கர்நாடகாவில் இன்று 34,804 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு,
கர்நாடகாவில் கடந்த சில மாதங்களாக குறைந்து வந்த கொரோனா பாதிப்பு இந்த மாத முதலில் இருந்து தொற்று நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், இன்று கர்நாடகாவில் இன்று 34,804 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 13,39,201 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு மேலும் 143 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14,426 ஆக உயர்ந்துள்ளது.
மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 6,982 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 10,62,594 ஆக அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் தற்போது வரை 2,62,162 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.