

புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா பரவல் உச்சத்தில் உள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பால் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிக அளவில் காணப்படுகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன.
கொரோனா பரிசோதனைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் நேற்று ஒருநாளில் மட்டும் 14 லட்சத்து 02 ஆயிரத்து 367- மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. இதுவரை பரிசோதிக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 27,93,21,177 - ஆக உள்ளது.