தேசிய செய்திகள்

கர்நாடகாவில் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு: முதல் மந்திரி எடியூரப்பா அறிவிப்பு + "||" + 14-day lockdown in state from tomorrow

கர்நாடகாவில் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு: முதல் மந்திரி எடியூரப்பா அறிவிப்பு

கர்நாடகாவில் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு: முதல் மந்திரி எடியூரப்பா அறிவிப்பு
கர்நாடகாவில் 14 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக முதல் மந்திரி எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
பெங்களூரு,

கர்நாடகத்தில் கொரோனா 2-வது அலை அதிவேகமாக பரவி வருகிறது. நேற்று முன்தினம் நிலவரப்படி தினசரி பாதிப்பு 30 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இதில் தலைநகர் பெங்களூருவில் தான் பாதிப்பு அதிகமாக உள்ளது. இந்தியாவிலேயே பெருநகரங்களில் பெங்களூரு தான் வைரஸ் பாதிப்பில் முதலிடத்தை பிடித்துள்ளது. மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டிவிட்டது.

கர்நாடகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரையில் அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் வருகிற 4-ந் தேதி வரை வார இறுதியில் சனி, ஞாயிறு ஆகிய 2 நாட்கள் முழு ஊரடங்கை அரசு அமல்படுத்தியுள்ளது. 

கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொட்டு வரும் நிலையில், 14 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார். நாளை இரவு 9 மணி முதல் மே 10 ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டும் என 4 மணி நேரம் மட்டுமே அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்ய கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்படும். பொது போக்குவரத்து ரத்து செய்யப்படுகிறது எனவும் எடியூரப்பா தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் நேற்று ஒருநாளில் மட்டும் 14.02 லட்சம் மாதிரிகள் பரிசோதனை
இந்தியாவில் கொரோனா பரவல் இதுவரை இல்லாத அளவுக்கு உச்சத்தில் உள்ளது.
2. தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல்
அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன.
3. கொரோனாவை கட்டுப்படுத்த 7 மாதங்களுக்கு பிறகு மீண்டும் முழு ஊரடங்கு; தமிழக சாலைகள் வெறிச்சோடின
முழுஊரடங்கு காரணமாக தமிழகத்தில் சாலைகள் நேற்று வெறிச்சோடி காணப்பட்டன. ஊரடங்கு உத்தரவை மீறி வௌியே வந்தவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.
4. கர்நாடகாவில் தினசரி கொரோனா பாதிப்பு 35 ஆயிரத்தை நெருங்கியது
கர்நாடகாவில் இன்று 34,804 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. தமிழகத்தில் 7 மாதங்களுக்குப் பிறகு இன்று மீண்டும் முழு ஊரடங்கு: சாலைகள் வெறிச்சோடின
கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் தமிழகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.