தேசிய செய்திகள்

மேற்குவங்காளம் 7வது கட்ட தேர்தல்: மாலை 5.31 மணி வரை 75.06% வாக்குகள் பதிவு + "||" + Bengal live: 75.06% voter turnout recorded till 5.31pm

மேற்குவங்காளம் 7வது கட்ட தேர்தல்: மாலை 5.31 மணி வரை 75.06% வாக்குகள் பதிவு

மேற்குவங்காளம் 7வது கட்ட தேர்தல்: மாலை 5.31 மணி வரை 75.06% வாக்குகள் பதிவு
மேற்குவங்காளம் 7வது கட்ட தேர்தலில் மாலை 5.31 மணி வரை 75.06% வாக்குகள் பதிவாகி உள்ளது.
கொல்கத்தா,

294 தொகுதிகள் கொண்ட மேற்கு வங்காள சட்டசபைக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த மார்ச் 27-ந்தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்த நிலையில், கடந்த 22-ந்தேதி 6-ம் கட்ட தேர்தல் முடிந்தது. இதன் மூலம் மொத்தம் 223 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு முடிந்துள்ளது. 

இதற்கிடையில், மேற்குவங்காளத்தின் மால்டா, கொல்கத்தா தெற்கு, முர்ஷிதாபாத், மேற்கு பர்தமான், தெற்கு தினாஜ்பூர் ஆகிய 5 மாவட்டங்களுக்கு உள்பட்ட 34 தொகுதிகளுக்கு இன்று 7-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 

முன்னதாக, 7-ம் கட்ட தேர்தலில் 36 தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் 2 தொகுதிகளில் (சம்ஜர்கஞ்ச், ஜங்கிப்பூர்) சஞ்சுக்தா மோச்சா கட்சி சார்பில் களமிறக்கப்பட்டிருந்த 2 வேட்பாளர்கள் மரணமடைந்ததையடுத்து அந்த தொகுதிகளுக்கு தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது. தேர்தல் தள்ளிவைக்கப்பட்ட 2 தொகுதிகளுக்கும் மே 16-ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மேற்குவங்காளத்தில் 34 தொகுதிகளுக்கு நடைபெற்று வரும் 7- ம் கட்ட தேர்தலில் பதிவாகி வரும் வாக்குப்பதிவு சதவிகிதம் தொடர்பான விவரத்தை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டு வருகிறது. 

அதன்படி, காலை 9.32 மணி நிலவரப்படி 17.47 சதவிகிதமும், காலை 11.36 மணி நிலவரப்படி 37.72 சதவிகிதமும், மதியம் 1.32 மணி நிலவரப்படி 55.12 சதவிகித வாக்குகளும்,  பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மாலை 5.31 மணி வரை 75.06% வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என  தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. சுவேந்து அதிகாரிக்கு எதிரான மனு: விசாரிக்கும் நீதிபதி பா.ஜ.க உறுப்பினர் ;வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டும் - மம்தா பானர்ஜி
சுவேந்து அதிகாரிக்கு எதிரான வழக்கை விசாரிக்கும் நீதிபதி பா.ஜ.க உறுப்பினர் வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டும் என மம்தா பானர்ஜி கோரிக்கை வைத்து உள்ளார்.
2. சுவேந்து அதிகாரி வெற்றியை எதிர்த்து மம்தா மனு- கொல்கத்தா ஐகோர்ட் இன்று விசாரணை
நந்திகிராம் சட்டப்பேரவைத் தொகுதியில், பா.ஜ.க.,வின் சுவேந்து அதிகாரி வெற்றி பெற்றதை எதிர்த்து, மம்தா பானர்ஜி கொல்கத்தா ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
3. முதல் மந்திரிக்கு கவர்னர் எழுதிய கடிதம் டுவிட்டரில் வெளியிடப்பட்டதற்கு மேற்கு வங்க அரசு விமர்சனம்
முதல் மந்திரி - கவர்னருக்கு இடையேயான தகவல் தொடர்பின் புனிதத்தை சீர்குலைப்பதாக உள்ளது என மேற்கு வங்க உள்துறை தெரிவித்துள்ளது.
4. நிவாரண பொருட்களை திருடியதாக சுவேந்து அதிகாரி மீது வழக்குப்பதிவு
நிவாரண பொருட்களை திருடியதாக சுவேந்து அதிகாரி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
5. மேற்கு வங்காளத்தை ஆணவத்தின் புயல் இன்னும் சுற்றுகிறது; மத்திய அரசு மீது சிவசேனா தாக்கு
ஆணவத்தின் புயல் இன்னும் மேற்கு வங்காளத்தில் சுற்றுவதாக கூறி மத்திய அரசை சிவசேனா கடுமையாக தாக்கி உள்ளது.