இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 17.23 லட்சம் மாதிரிகள் பரிசோதனை

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 17.23 லட்சம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 17.23 லட்சம் மாதிரிகள் பரிசோதனை
Published on

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் உச்சத்தில் உள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தினம் தினம் புதிய உச்சத்தை எட்டி மக்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

கடந்த சில தினங்களாக கொரோனா உயர்ந்து வந்த நிலையில், நேற்று மட்டும் சற்று குறைந்தது. கொரோனா பாதிப்பை கண்டறிய நாடு முழுவதும் பரிசோதனைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

கடந்த 24 மணி நேரத்தில் 17 லட்சத்து 23 ஆயிரத்து 912- மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. இதுவரை பரிசோதிக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 28 கோடியே 27 லட்சத்து 03 ஆயிரத்து 789- ஆக உயர்ந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com