இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3.6 லட்சம் பேருக்கு கொரோனா

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,60,960 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3.6 லட்சம் பேருக்கு கொரோனா
Published on

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை தினமும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இன்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3 லட்சத்து 60 ஆயிரத்து 960 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதிதாக பாதிக்கப்பட்ட இந்த நோயாளிகளையும் சேர்த்து இந்தியாவில் இதுவரை தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 79 லட்சத்து 97 ஆயிரத்து 267 ஆகியிருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் 3 ஆயிரத்து 293 பேர் கொரோனாவால் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

இதன் மூலம் நாட்டின் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 01 ஆயிரத்து 187 ஆகி இருக்கிறது. அதே சமயம் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 61 ஆயிரத்து 162 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.

இதனால் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 48 லட்சத்து 17 ஆயிரத்து 371 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் தற்போது 29 லட்சத்து 78 ஆயிரத்து 709 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com