தேசிய செய்திகள்

நாடு முழுவதும் 14.78-கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன- மத்திய சுகாதரத்துறை அமைச்சகம் + "||" + Over 14.78 crore COVID-19 vaccines administered so far: Centre

நாடு முழுவதும் 14.78-கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன- மத்திய சுகாதரத்துறை அமைச்சகம்

நாடு முழுவதும் 14.78-கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன- மத்திய சுகாதரத்துறை அமைச்சகம்
நாடு முழுவதும் 14.78- கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா வைரசின் 2-வது அலை தாக்கம் மிகக்கடுமையாக உள்ளது. உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக பதிவாகி வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கை மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. 

 பல மாநிலங்களில் ஊரடங்குக்கு நிகரான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.  கொரோனா தடுப்பூசி போடும் பணியும்  தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.  இந்த நிலையில்,  நாட்டில் இதுவரை 14.78 கோடி டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கடந்த  24 மணி நேரத்தில் 25 லட்சத்திற்கு மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவில் கடந்த ஜனவரி 16 ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக மருத்துவ பணியாளர்களுக்கு போடப்பட்டது. வரும் மே 1 ஆம் தேதி 18-வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

1. புதுவையில் மேலும் 1,258- பேருக்கு கொரோனா
புதுவையில் மேலும் 1,258- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. கொரோனா தடுப்பூசியின் விலையை உயர்த்தியிருப்பது அநியாயம் - திமுக தலைவர் ஸ்டாலின்
கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தவறிவிட்டதாக திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
3. மே 1 முதல் கொரோனா தடுப்பூசி - இன்று மாலை 4 மணிக்கு முன்பதிவு ஆரம்பம்
18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள இன்று மாலை 4 மணி முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
4. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 17.23 லட்சம் மாதிரிகள் பரிசோதனை
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 17.23 லட்சம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
5. இந்தியாவின் புதிய வகை கொரோனா வைரஸ் 17 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது- உலக சுகாதார அமைப்பு
இந்தியாவில் காணப்படும் புதிய வகை கொரோனா வைரஸ் 17 நாடுகளில் பரவியிருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.