தேசிய செய்திகள்

டெல்லியில் குவியும் சடலங்கள் விடாமல் எரியும் சிதைகள் 20 மணி நேரம் காத்திருக்கும் சொந்தங்கள் + "||" + At Delhi crematoriums, corpses wait in 20-hour queues to burn

டெல்லியில் குவியும் சடலங்கள் விடாமல் எரியும் சிதைகள் 20 மணி நேரம் காத்திருக்கும் சொந்தங்கள்

டெல்லியில் குவியும் சடலங்கள் விடாமல் எரியும் சிதைகள் 20 மணி நேரம் காத்திருக்கும் சொந்தங்கள்
காசிப்பூர் மயானத்தில் எங்கு பார்த்தாலும் சடலங்கள் எரிந்து கொண்டிருந்தன. இடப்பற்றாக்குறை காரணமாக பூங்காவும் மயான பூமியாக மாற்றப்பட்டுள்ளது.
புதுடெல்லி

டெல்லியில் கொரோனா நோய்க்கு பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மயான பூமியில் சடலங்கள் குவிந்தபடி உள்ளன.

டெல்லியில் கெரோனா தொற்றுக்கு நேற்று மட்டும் மேலும் 381 பேர் பலியானதால், இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

கடந்த 6 நாட்களாக தினசரி 300க்கும் மேற்பட்டோரின் உயிரை கொரோனா பறித்து வருகிறது.

இதனால் மயானத்தில் நிரம்பி வழியும் சடலங்களை எரிக்க முடியாமல் திணறும் நிலை ஏற்பட்டுள்ளது. உடல்களுடன்  உறவினர்கள் பல மணி நேரம் காத்திருக்கும் சூழல் உருவாகி உள்ளது.

காசிப்பூர் மயானத்தில் எங்கு பார்த்தாலும் சடலங்கள் எரிந்து கொண்டிருந்தன. இடப்பற்றாக்குறை காரணமாக பூங்காவும் மயான பூமியாக மாற்றப்பட்டுள்ளது.

உயிரிழப்பு தொடர்ந்து உயர்ந்து வருவதால் தினசரி ஆயிரம் சடலங்களை எரிக்கும் அளவுக்கு ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகங்கள் மேற்கொண்டு வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா தடுப்பு பணிகள்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் தலைமைச் செயலர், சுகாதாரத் துறை செயலர் ஆலோசனை
தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்கவுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, கொரோனா தடுப்பு பணிகள் குறித்து தலைமைச் செயலாளர், சுகாதாரத் துறை செயலர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆலோசனை நடத்தினார்.
2. நாடு தழுவிய கொரோனா ஊரடங்கை அறிவிக்க வாய்ப்பில்லை -மத்திய அரசு
இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு சற்று குறைந்து உள்ளது . இந்த நிலையில் நாடு தழுவிய கொரோனா ஊரடங்கை மத்திய அரசு அறிவிக்க வாய்ப்பில்லை என தகவல் வெளியாகி உள்ளது.
3. ஆந்திராவில் மே 5 முதல் மதியம் 12 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு நேரம் நீட்டிப்பு
ஆந்திராவில் மே 5 முதல் மதியம் 12 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு நேரம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
4. கொரோனா செய்திகளை ஒளிபரப்ப தடை கோரும் மனு டெல்லி ஐகோர்ட்டில் தள்ளுபடி
செய்தி சரியாக இருந்தால் ஊடகங்களுக்கு தடை விதிக்க முடியாது கொரோனா செய்திகளை ஒளிபரப்ப கட்டுப்பாடுகள் கோரும் மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது.
5. கர்நாடகா: ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக 24 நோயாளிகள் பலி - விசாரணைக்கு உத்தரவு
கர்நாடகா மாநிலத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக 24 நோயாளிகள் பலியான விவகாரத்தில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.