தேசிய செய்திகள்

18 வயதுக்கு மேற்பட்டோர் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான முன்பதிவு தொடங்கியது + "||" + "CoWIN Crashed," Complain Many As Vaccine Registration For 18+ Begins

18 வயதுக்கு மேற்பட்டோர் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான முன்பதிவு தொடங்கியது

18 வயதுக்கு மேற்பட்டோர் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான முன்பதிவு தொடங்கியது
18 வயதுக்கு மேற்பட்டோர் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான முன்பதிவு இணையத்தளத்திலும், செயலிகளிலும் தொடங்கியுள்ளது.
புதுடெல்லி

இந்தியாவில் இதுவரை 14.5 கோடி பேருக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

நாட்டில் கடந்த ஜனவரி 16-ம் தேதி முதல் கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று காலை வரை 14,50,85,911 பேருக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி டோஸ் போடப்பட்டுள்ளது.

சுகாதாரத்துறை ஊழியர்களில் 93,23,439 பேர் முதல் டோஸையும், 60,59,065 பேர் 2-வது டோஸையும் போட்டுக் கொண்டுள்ளனர். முன்களப் பணியாளர்களில் 1,21,00,254 பேர் முதல் டோஸையும், 64,11,024 பேர் 2-வது டோஸையும் போட்டுக் கொண்டுள்ளனர். 45 முதல் 59 வயதுக்குள்பட்டோர் பிரிவில் 4,92,77,949 பேர் முதல் டோஸையும், 26,78,151 பேர் 2-வது டோஸையும் செலுத்திக் கொண்டுள்ளனர். 60 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில் 5,05,37,922 பேர் முதல் டோஸையும், 86,98,107 பேர் 2-வது டோஸையும் செலுத்திக் கொண்டுள்ளனர். 

இந்த நிலையில் 18 வயதுக்கு மேற்பட்டோர் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான இணையத்தளப் பதிவு இன்று மாலை 4 மணிக்குத் தொடங்கும் என மத்திய அரசு அறிவித்து இருந்தது. அத்னபடி முன்பதிவு தொடங்கியது.

மே முதல் நாளில் இருந்து 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு கோவின் இணையத்தளத்தில் இன்று முதல் பதிவு செய்துகொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்தது. நள்ளிரவுக்குப் பிறகு பதிவு செய்யப் பலர் முயன்றும் முடியவில்லை என தகவல் வெளியானது.

இந்நிலையில், கோவின் இணையத்தளம், ஆரோக்கிய சேது செயலி, உமாங் செயலி ஆகியவற்றின் மூலம் இன்று மாலை 4 மணி முதல் பதிவு செய்துகொள்ளலாம் என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

மே 1ஆம் தேதிமுதல் தடுப்பூசி செலுத்திக்கொள்ள விருப்பப்படும் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அடுத்த 48 மணிநேரத்தில் ’கோவின்’(CoWin) என்ற அரசின் இணையதளத்தில் தங்கள் பெயரை பதிவு செய்துகொள்ளலாம்.

கோவின் தளம் செயல்படவில்லை என்று பலர்  புகார் செய்தனர், மற்றவர்கள் இந்த செயல்முறையை வெற்றிகரமாக முடித்தனர். மாலை 4 மணிக்கு பதிவுகள் திறக்கப்பட்ட ஒரு மணி நேரத்திற்குள், இணையத தளம்  முடங்கியது பின்னர் அது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது

 பதிவு செய்யும் முறை 

1. cowin.gov.in என்ற இணையப்பக்கத்திற்குச் செல்லவும்.

2. பதிவுசெய்ய 'register/sign in yourself'என்பதை க்ளிக் செய்யவும்.

3. உங்களுடைய 10 இலக்க மொபைல் எண் அல்லது ஆதார் எண்ணை டைப் செய்யவும்.

4. உங்களுடைய மொபைல் எண்ணிற்கு வரும் OTP-யை நிரப்பவும்.

5. உங்களுடைய விவரங்களை பதிவுசெய்தபிறகு, தடுப்பூசி போட்டுக்கொள்ள நீங்கள் விரும்பும் தேதி மற்றும் நேரத்தைக் குறிப்பிடவும்.

தடுப்பூசி செலுத்திக்கொண்டபிறகு, உங்களுக்கு குறிப்பு ஐடி( Reference ID) ஒன்று கொடுக்கப்படும். அதைவைத்து, தடுப்பூசி செலுத்திக்கொண்டதற்கான சான்றிதழைப் பெற்றுக்கொள்ளலாம்.

பதிவுசெய்ய தேவையான ஆவணங்கள்:

ஆதார் அட்டை, பான் காடு, வாக்காளர் அடையாள அட்டை, ஒட்டுநர் உரிமம், சுகாதார காப்பீட்டு ஸ்மார்ட் கார்டு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை அடையாள அட்டை, எம்.பி/எம்.எ.ஏ/எம்.எல்.சி வழங்கிய அடையாள அட்டை, பாஸ்போர்ட், பாஸ்புக்(வங்கி/ அஞ்சலகம்), ஓய்வூதிய அட்டை, மத்திய / மாநில அரசு / பொது நிறுவனங்களால் ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட சேவை அடையாள அட்டை

போன்ற மேற்கண்ட ஆவணங்களில் ஏதேனும் ஒன்று அவசியம்.

ஆரோக்ய சேது செயலிமூலம் பதிவுசெய்யும் முறை

ஆரோக்ய சேது செயலியின் முன்பக்கத்திலுள்ள கோவின் பக்கத்தை க்ளிக் செய்யவும் 

 தடுப்பூசி முன்பதிவை செலக்ட் செய்யவும்

 மொபைல் எண்ணை டைப் செய்யவும் 

 ஓடிபியை நிரப்பவும். 

 சரிபார்க்க(Verify)வை அழுத்தவும் 

அங்கிருந்து தடுப்பூசி முன்பதிவு பக்கத்திற்கு சென்றுவிடும். பிறகு கோவின் செயலிக்கு குறிப்பிட்டதைப் போன்றே பதிவுசெய்யவும்.

முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்ட அனைவருமே 2வது டோஸ் தடுப்பூசியையும் கட்டாயம் செலுத்திக்கொள்ள வேண்டும். முதல் டோஸ் செலுத்திக்கொண்ட 28 நாட்களிலிருந்து 42 நாட்களுக்குள் இரண்டாவது டோஸ் தடுப்பூசியையும் எடுத்திருக்கவேண்டும் என கோவின் இணையதளம் கூறுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. டெல்லியில் குவியும் சடலங்கள் விடாமல் எரியும் சிதைகள் 20 மணி நேரம் காத்திருக்கும் சொந்தங்கள்
காசிப்பூர் மயானத்தில் எங்கு பார்த்தாலும் சடலங்கள் எரிந்து கொண்டிருந்தன. இடப்பற்றாக்குறை காரணமாக பூங்காவும் மயான பூமியாக மாற்றப்பட்டுள்ளது.
2. கொரோனா சிகிச்சை மையங்களை கண்காணிக்க சிறப்பு அதிகாரி நியமனம் -தமிழக அரசு அரசாணை
கொரோனா சிகிச்சை மையங்களை கண்காணிக்க சிறப்பு அதிகாரி நியமனம் குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
3. சென்னையில் தனியார் மருத்துவமனைகள், உணவகங்கள் கொரோனா சிகிச்சை மையம் தொடங்கலாம் - மாநகராட்சி அறிவிப்பு
சென்னையில் தனியார் மருத்துவமனைகள், உணவகங்கள் கொரோனா சிகிச்சை மையம் தொடங்கலாம் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
4. இந்தியாவில் அனைத்து உள்நாட்டு விமான சேவைகளையும் படிப்படியாக மீண்டும் தொடங்க நடவடிக்கை
இந்தியாவில் அனைத்து உள்நாட்டு விமான சேவைகளையும் படிப்படியாக மீண்டும் தொடங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக விமானப் போக்குவரத்து இயக்குனரகமான டிஜிசிஏ தெரிவித்துள்ளது.
5. 18 வயதுக்கு மேற்பட்டோர் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான ஆன்லைன் பதிவு இன்று தொடங்குகிறது;பதிவு செய்யும் முறை
18 வயதுக்கு மேற்பட்டோர் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான ஆன்லைன் பதிவு இன்று தொடங்குகிறது ; எவ்வாறு பதிவு செய்ய வேண்டும்