கர்நாடகாவில் புதிதாக 35,024 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 270 பேர் பலி


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 29 April 2021 1:47 PM GMT (Updated: 29 April 2021 1:47 PM GMT)

கர்நாடக மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 35,024 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரு,

இந்தியாவில் கொரோனா வைரசின் 2-வது அலை அதி தீவிரமடைந்து வருகிறது. ஒவ்வொரு மாநிலங்களிலும் இதுவரை இல்லாத அளவிற்கு புதிய உச்சத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், கர்நாடக மாநிலத்தின் இன்றைய கொரோனா பரவல் தொடர்பான விவரங்களை அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. 

அதன்படி, கர்நாடகாவில் இன்று ஒரேநாளில் 35 ஆயிரத்து 024 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அம்மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 14 லட்சத்து 74 ஆயிரத்து 846 ஆக அதிகரித்துள்ளது. (பெங்களூருவில் மட்டும் 19,637 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்)

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 3 லட்சத்து 49 ஆயிரத்து 496 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து இன்று ஒரேநாளில் 14 ஆயிரத்து 142 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால், கர்நாடகாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 11 லட்சத்து 10 ஆயிரத்து 025 ஆக அதிகரித்துள்ளது.

ஆனாலும், கொரோனா தாக்குதலால் கர்நாடகாவில் இன்று ஒரேநாளில் 270 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், அம்மாநிலத்தில் கொரோனா பாதிப்பால் இதுவரை உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 15 ஆயிரத்து 306 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக கர்நாடகா மாநிலத்தில் தற்போது முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story