கேரளாவில் 6 நாட்கள் ஊரடங்கு - முதல்-மந்திரி பினராயி விஜயன் தகவல்


கேரளாவில் 6 நாட்கள் ஊரடங்கு - முதல்-மந்திரி பினராயி விஜயன் தகவல்
x
தினத்தந்தி 29 April 2021 10:52 PM GMT (Updated: 29 April 2021 10:52 PM GMT)

கேரளாவில் வரும் 4-ந் தேதி முதல் 9-ந் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக முதல்-மந்திரி பினராயி விஜயன் கூறியுள்ளார்.

திருவனந்தபுரம்,

இதுகுறித்து திருவனந்தபுரத்தில் முதல்-மந்திரி பினராயி விஜயன் நிருபர்களிடம் கூறியதாவது:-

கேரளாவில் கொரோனா பரவல் தீவிரமாக உள்ள நிலையில் பொதுமக்கள் சுய கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும். தேவையில்லாமல் தெருவீதிகளில் நடமாடுவது, ஊர் சுற்றுவதை அனைவரும் தவிர்க்க வேண்டும். தானாக முன் வந்து விழாக்களை தவிர்த்து, பயணங்களை ரத்து செய்ய வேண்டும்.

அதிகரித்து வரும் கொரோனாவை கட்டுப்படுத்த அரசு மேலும் கட்டுப்பாடுகளை திணிக்க வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. தற்போது சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. அதே தளர்வுகளுடன் வரும் 4-ந் தேதி முதல் 9-ந் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இந்த நாட்களில் அரசு அலுவலகங்களின் செயல்பாடு குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.

டி.வி.சீரியல் படப்பிடிப்பு நிறுத்தப்படும். காய்கறி, மீன் வியாபாரிகள் 2 முககவசம் அணிந்து, 2 மீட்டர் இடைவெளியுடன் வியாபாரம் செய்வதை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story