மேற்குவங்காள முதல்மந்திரியாக மம்தா பானர்ஜி நாளை மறுநாள் பதவியேற்பு
மேற்குவங்காள முதல்மந்திரியாக மம்தா பானர்ஜி நாளை மறுநாள் பதவியேற்க உள்ளார்.
கொல்கத்தா,
மேற்குவங்காளத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியை தக்கவைத்துள்ளது. நடந்து முடிந்த மேற்குவங்காள தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் 213 தொகுதிகளை கைப்பற்றியது. பாஜக 77 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றி தோல்வியடைந்தது. சிபிம் கூட்டணி 1 தொகுதியையும், மற்றவை 1 தொகுதியையும் கைப்பற்றியுள்ளது.
ஆட்சியை தக்க வைத்துள்ள மம்தா பானர்ஜி 3-வது முறையாக மேற்குவங்காள முதல்மந்திரி பதவியேற்க உள்ளார். இந்நிலையில், மேற்குவங்காள முதல்மந்திரியாக மம்தா பானர்ஜி எப்போது பதவியேற்பார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
பதவியேற்பு தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் பார்தா சாட்டர்ஜி கூறுகையில், மே 5-ம் தேதி (நாளை மறுநாள்) மம்தா பானர்ஜி மேற்குவங்காள முதல்மந்திரியாக பதவியேற்பார்’ என்றார்.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பதவியேற்பு விழா மிகவும் எளிமையான முறையில் நடைபெறும் என திரிணாமுல் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Related Tags :
Next Story