கேரளாவில் இன்று 26,011 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கேரளாவில் இன்று ஒரேநாளில் 26 ஆயிரத்து 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரளாவில் இன்று 26,011 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
Published on

திருவனந்தபுரம்,

கேரளாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கொரோனா வைரஸ் தொடர்பான இன்றைய தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது.

அதன்படி, கேரளாவில் இன்று ஒரேநாளில் 26 ஆயிரத்து 11 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அம்மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 16 லட்சத்து 64 ஆயிரத்து 789 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 3 லட்சத்து 45 ஆயிரத்து 887 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 19 ஆயிரத்து 519 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், கேரளாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 13 லட்சத்து 13 ஆயிரத்து 109 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தாக்குதலுக்கு இன்று 45 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், கேரளாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5 ஆயிரத்து 450 ஆக அதிகரித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com