மராட்டியத்தில் இன்று 48 ஆயிரம் பேருக்கு கொரோனா - 59 ஆயிரம் பேர் டிஸ்சார்ஜ்

மராட்டியத்தில் இன்று ஒரேநாளில் 48 ஆயிரத்து 621 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மராட்டியத்தில் இன்று 48 ஆயிரம் பேருக்கு கொரோனா - 59 ஆயிரம் பேர் டிஸ்சார்ஜ்
Published on

மும்பை,

இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக, மராட்டியத்தில் உச்சமடைந்திருந்த கொரோனா தற்போது மெல்லமெல்ல குறையத்தொடங்கியுள்ளது. இந்நிலையில், மராட்டியத்தில் கொரோனா வைரஸ் பரவலின் இன்றைய நிலவரத்தை அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி, மராட்டியத்தில் இன்று ஒரேநாளில் 48 ஆயிரத்து 621 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 47 லட்சத்து 71 ஆயிரத்து 22 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 6 லட்சத்து 56 ஆயிரத்து 870 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அம்மாநிலத்தில் இன்று ஒரேநாளில் 59 ஆயிரத்து 500 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால், மராட்டியத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 40 ஆயிரத்து 41 ஆயிரத்து 158 ஆக அதிகரித்துள்ளது.

ஆனால், மராட்டியத்தில் கொரோனா தாக்குதலுக்கு இன்று ஒரேநாளில் 567 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், அம்மாநிலத்தில் கொரோனா தாக்குதலுக்கு உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 70 ஆயிரத்து 851 ஆக அதிகரித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com