தேசிய செய்திகள்

மே.வங்கத்தில் வன்முறை-6 பேர் பலி: உள்துறை அமைச்சகம் அறிக்கை கேட்பு + "||" + PM Modi Calls Bengal Governor Over Post Poll Violence, MHA Seeks Report as Mamata Banerjee Calls for Calm

மே.வங்கத்தில் வன்முறை-6 பேர் பலி: உள்துறை அமைச்சகம் அறிக்கை கேட்பு

மே.வங்கத்தில் வன்முறை-6 பேர் பலி: உள்துறை அமைச்சகம் அறிக்கை கேட்பு
மேற்கு வங்காளத்தில் தேர்தலுக்கு முடிவுகள் வெளியான பிறகு பல்வேறு இடங்களில் வன்முறை நடைபெற்றதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.
புதுடெல்லி,

மேற்கு வங்காள சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் கடந்த ஞாயிறன்று அறிவிக்கப்பட்டது. ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சியை மீண்டும் தக்க வைத்துக்கொண்டது. முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கும்போது மாநிலத்தின் பல பகுதிகளில் தங்கள் மீது ஆளும் திரிணாமூல் தொண்டர்கள் தாக்குதல் நடத்தியதாக பாஜக தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. 

இத்தாக்குதலில் தங்கள் கட்சி தொண்டர்கள், ஆதரவாளர்கள் என 6 பேர் கொல்லப்பட்டதாகவும் ஏராளமான கடைகள் சூறையாடப்பட்டு, தீ வைக்கப்பட்டதாகவும் பாஜகவினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இது தொடர்பான வீடியோ ஆதாரங்கள் என சில பதிவுகளையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து மேற்கு வங்க அரசிடம் உள்துறை விளக்கம் கேட்டுள்ளது. 

இதற்கிடையில் திரிணாமூல் தொண்டர்கள் அமைதி காக்கவேண்டும் என்றும் வன்முறையை தூண்ட வைக்கும் பாஜகவினரின் முயற்சிகளுக்கு பலியாகி விடக் கூடாது என்றும் முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவுறுத்தியுள்ளார். இதற்கிடையில், இவ்விவகாரம் தொடர்பாக மேற்கு வங்க ஆளுநரிடம் பிரதமர் மோடி பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு ஒத்தி வைப்பு
முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு 4 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்படுவதாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.
2. இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை
இங்கிலாந்து பிரதமா் போரிஸ் ஜான்சனுடன் காணொலி வாயிலாக நாளை (மே 4) பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார்.
3. மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து 'கொரோனாவை தோற்கடிக்க இணைந்து செயல்படுவோம்'
தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றதற்காக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, கொரோனாவை தோற்கடிக்க இணைந்து செயல்படுவோம் என்று கூறியுள்ளார்.
4. மக்களுடன் தொடர்பிலேயே இருக்க வேண்டும் கொரோனா சூழல் தொடர்பான கருத்துகளை மக்களிடம் கேட்டறியுங்கள் - மத்திய மந்திரிகளுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்
மக்களுடன் தொடர்பிலேயே இருக்குமாறும், கொரோனா சூழல் குறித்து அவர்களிடம் கருத்துகளை கேட்டறியுமாறும் மத்திய மந்திரிகளுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார்.
5. “மிசோரம் காட்டுத்தீயை அணைக்க அனைத்து விதங்களிலும் உதவுவோம்”; பிரதமர் மோடி உறுதி
மிசோரம் மாநில முதல்-மந்திரி சோரம்தங்காவிடம், பிரதமர் நரேந்திரமோடி நேற்று தொடர்பு கொண்டு பேசினார்.