தேசிய செய்திகள்

3-வது கொரோனா அலையை எதிர்கொள்ள தயாராகி வருகிறோம்: உத்தவ் தாக்கரே + "||" + We are preparing to face the 3rd corona wave; Uddhav Thackeray

3-வது கொரோனா அலையை எதிர்கொள்ள தயாராகி வருகிறோம்: உத்தவ் தாக்கரே

3-வது கொரோனா அலையை எதிர்கொள்ள தயாராகி வருகிறோம்: உத்தவ் தாக்கரே
3-வது கொரோனா அலையை எதிர்கொள்ள தயாராகி வருகிறோம் என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.

3-வது அலை

முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே ஆன்லைன் மூலம் பொது மக்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

பல மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. சில மாவட்டங்களில் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. எனவே பொது மக்கள் நோய் பரவல் குறைந்துவிட்டது என அலட்சியமாக இருக்க கூடாது. பொது மக்கள் முககவசம் அணிந்து எப்போதும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். மத்திய நிபுணர் குழுவினர் 3-வது கொரோனா வைரஸ் அலை குறித்து எச்சரித்து உள்ளனர். நாம் 3-வது அலையை எதிர்கொள்ள கடந்த மாதம் முதலே தயாராகி வருகிறோம்.

சுப்ரீம் கோர்ட்டு பாராட்டு

மும்பையில் நோய் பரவல் கட்டுபடுத்தப்பட்டதை சுப்ரீம் கோர்ட்டை பாராட்டி உள்ளது. நாம் தினந்தோறும் 1,200 டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்து வருகிறோம். ஆனால் 1,700 டன் பயன்படுத்துகிறோம். எனவே ஆக்சிஜன் உற்பத்தியை 3 ஆயிரம் டன் ஆக உயர்த்த பணிகள் தொடங்கி உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.


தொடர்புடைய செய்திகள்

1. மராட்டியத்தில் கடுமையான ஊரடங்கு அமல்படுத்த வேண்டியதில்லை: உத்தவ் தாக்கரே
மக்கள் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றுவதால் கடுமையான ஊரடங்கை அமல்படுத்த வேண்டியது இல்லை என உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
2. 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி: பிரதமர் மோடிக்கு உத்தவ் தாக்கரே நன்றி
மத்திய அரசு நேற்று 18 வயதுக்கு அதிகமானவர்களுக்கு தடுப்பூசி செலுத்த அனுமதியை வழங்கி உள்ளது.
3. உத்தவ் தாக்கரேவின் மலிவான அரசியல் அதிர்ச்சி அளிக்கிறது: பியூஷ் கோயல் குற்றச்சாட்டு
மராட்டியத்துக்கு இந்த மாத இறுதிக்குள் 2 ஆயிரம் மெட்ரிக் டன் ஆக்சிஜன் நாளொன்றுக்கு தேவைப்படும் என மதிப்பிட்டு உள்ளதாக பிரதமர் மோடிக்கு மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கடிதம் எழுதியிருந்தார்.
4. கொரோனாவுக்கு எதிரான போரை வெற்றி பெற செய்யுங்கள்; பொதுமக்களுக்கு உத்தவ் தாக்கரே வேண்டுகோள்
ஏழைகளுக்கு 3 கிலோ கோதுமை, 2 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்த முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, கொரோனாவுக்கு எதிரான மீண்டும் ஒரு போரை வெற்றி பெற செய்யுங்கள் என்று பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.
5. மராட்டியத்தில் முழு ஊரடங்கா? இன்று இரவு 8.30 மணிக்கு உத்தவ் தாக்கரே உரை
மராட்டிய மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவல் உச்சத்தில் உள்ளது.