கொரோனாவால் இறந்த தந்தையின் சிதை நெருப்பில் பாய்ந்த மகள்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 6 May 2021 8:25 AM IST (Updated: 6 May 2021 8:25 AM IST)
t-max-icont-min-icon

ராஜஸ்தானில் கொரோனாவால் இறந்த தந்தையின் சிதை நெருப்பில் அவரது மகள் பாய்ந்த அதிர்ச்சி அசம்பவம் நிகழ்ந்தது.

ஜெய்ப்பூர்,

நாடு முழுவதும் கொரோனாவில் இரண்டாவது அலையின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்த வைரஸ் தொற்றுக்கு ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன..

இந்நிலையில் ராஜஸ்தானில் கொரோனாவால் இறந்த தந்தையின் சிதை நெருப்பில் அவரது மகள் பாய்ந்த அதிர்ச்சி அசம்பவம் நிகழ்ந்தது. 

ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தை சேர்ந்தவர் தாமோதர்தாஸ் சார்தா. இவருக்கு 73 வயதாகிறது. இவருக்கு 3 மகள்கள் இருக்கிறார்கள். மூன்றாவது மகள் சந்திரா சார்தா.

கொரோனா பாதிப்பால் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் தாமோதர்தாஸ் சேர்க்கப்பட்டார். நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி இறந்தார். மயானத்தில் தாமோதர்தாசின் உடலை எரித்தபோது, அவரது இளைய மகள் சந்திரா, திடீரென சிதை நெருப்பில் பாய்ந்துவிட்டார். 

அவரை பிறர் பிடித்து இழுத்து காப்பாற்றிவிட்டாலும், 70 சதவீத தீக்காயங்கள் அடைந்தார். முதலில் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட சந்திரா, பின்னர் மேல்சிகிச்சைக்காக ஜோத்பூர் நகர ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story