கொரோனா சூழலில் இந்திய மக்களுடன் மனதார துணை நிற்கிறேன் - போப் ஆண்டவர்


கொரோனா சூழலில் இந்திய மக்களுடன் மனதார துணை நிற்கிறேன் - போப் ஆண்டவர்
x
தினத்தந்தி 7 May 2021 10:49 AM IST (Updated: 7 May 2021 10:49 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா சூழலில் இந்திய மக்களுடன் மனதார துணை நிற்கிறேன் என போப் ஆண்டவர் பிரான்சிஸ் கூறி உள்ளார்.

புதுடெல்லி

கொரோனா இரண்டாவது அலையால் இந்தியா மிக மோசமான பாதிப்பை சந்தித்து வருகிறது. நாளுக்கு நாள் தொற்றின் வீரியம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. 

கொரோனா நெருக்கடியில் அயராது உழைத்து வரும் இந்திய மருத்துவர்களுக்கு,  போப் ஆண்டவர் பிரான்சிஸ் புகழாரம் சூட்டியுள்ளார். இதுதொடர்பாக போப் பிரான்சிஸ் வெளியிட்டு உள்ள செய்தியில் கூறி இருப்பதாவது:-

இந்திய மக்களுடன் மனதார துணை நிற்கிறேன். நோயுற்றவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை காட்டிலும் நோயாளிகளை கவனித்துக்கொள்ளும் மருத்துவ ஊழியர்கள் தான் என் எண்ணத்தில் இருக்கின்றனர்.

குறிப்பாக, கொரோனாவால் உயிரிழந்தவர்களை பிரிந்து வாடும் மக்களுக்கு என் அனுதாபங்கள். மக்களின் உடனடி தேவைகளை சரி செய்வதற்காக ஏராளமான மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் அயராது உழைத்து வருகின்றனர். 

அவர்களுக்கு எனது பாராட்டுகளை தெரிவிப்பதுடன் விடாமுயற்சி, பலம் மற்றும் அமைதியை கடவுள் கொடுக்க வேண்டுமென வேண்டுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Next Story