மக்களின் நலன் மீது கவனம் செலுத்த வேண்டும் : மத்திய அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்
மத்திய விஸ்டா திட்டத்துக்கு செலவிடுதை விட மக்கள் மீது கவனம் செலுத்துங்க்ள் என ராகுல் காந்தி கூறியுள்ளார்.
கொரோனா பெருந்தொற்று பரவலை மத்திய அரசு முறையாக கையாண்டு கட்டுப்படுத்தவில்லை எனராகுல் காந்தி கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்த நிலையில், மத்திய விஸ்டா திட்டத்துக்கு செலவிடுதை விட மக்கள் மீது கவனம் செலுத்துங்க்ள் என ராகுல் காந்தி கூறியுள்ளார். தனது டுவிட்டரில் ராகுல் காந்தி கூறியிருப்பதாவது:
மத்திய விஸ்டா திட்டம் கிரிமினல் விரயம். மக்களின் உயிருக்கும், வாழ்க்கைக்கும் முக்கியத்துவம் அளியுங்கள். புதிய வீட்டைப் பெறுவதற்காக உங்கள் கண்மூடித்தனமான அகங்காரத்துக்கு முக்கியத்துவம் அளிக்காதீர்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, மத்திய விஸ்டா திட்டத்திற்கு 1,350 கோடி செலவிடப்படுவதாகவும் இந்த தொகையின் மூலம் 45 கோடி மக்களுக்குத் தடுப்பூசி செலுத்த முடியும். ஒரு கோடி ஆக்சிஜன் சிலிண்டர்கள் வாங்கலாம், 2 கோடி குடும்பங்களுக்கு நியாய் திட்டத்தின் மூலம் ரூ.6 ஆயிரம் நிதியுதவி வழங்கலாம். ஆனால் மக்களின் உயிரைவிடப் பிரதமரின் ஈகோதான் பெரியது” என்று அண்மையில் ராகுல் காந்தி விமர்சித்து இருந்தார்.
Related Tags :
Next Story