பெங்களூருவில் மேலும் 51 போலீசாருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
பெங்களூருவில் இதுவரை 1,094 போலீசார் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
பெங்களூரு,
பெங்களூருவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. தினமும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். அதுபோல், போலீசாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படுவது அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக கொரோனா பீதியிலேயே போலீசார் தினமும் பணியாற்ற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
பெங்களூருவில் நேற்று முன்தினம் வரை 1,043 போலீசார் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி இருந்தார்கள். இந்த நிலையில், நேற்று ஒரே நாளில் 51 போலீசார் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். இதன்மூலம் பெங்களூருவில் ஒட்டு மொத்தமாக 1,094 போலீசார் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
இவர்களில் 264 போலீசார் குணமடைந்துள்ளனர். 11 போலீசார் கொரோனாவுக்கு உயிர் இழந்துள்ளனர். 41 பேர் பல்வேறு ஆஸ்பத்திரிகளிலும், 778 போலீசார் வீட்டு தனிமையிலும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். பெங்களூருவில் போலீசாருக்கு தொடர்ந்து கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருவதால் சக போலீசாா் பீதி அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story