தேசிய செய்திகள்

சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 12,239 பேருக்கு கொரோனா + "||" + Corona to 12,239 people in Chhattisgarh state in last 24 hours

சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 12,239 பேருக்கு கொரோனா

சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 12,239 பேருக்கு கொரோனா
சத்தீஸ்கர் மாநிலத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,42,356 ஆக அதிகரித்துள்ளது.
ராய்பூர்,

சத்தீஸ்கர் மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 12,239 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,42,356 ஆக அதிகரித்துள்ளது.

அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 223 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதனால் சத்தீஸ்கர் மாநிலத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,381 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் கடந்த 24 மணி நேரத்தில் 371 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். 

இதன் மூலம் சத்தீஸ்கரில் இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7,01,116 ஆக உயர்ந்துள்ளது. தற்போது மாநிலம் முழுவதும் 1,30,859 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சத்தீஸ்கர் மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. பெங்களூருவில் மேலும் 51 போலீசாருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
பெங்களூருவில் இதுவரை 1,094 போலீசார் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
2. ஜம்போ சிகிச்சை மையங்களை அகற்றாமல் இருந்தது 2-வது கொரோனா அலையை எதிர்கொள்ள உதவியது; மும்பை மாநகராட்சி தகவல்
ஜம்போ சிகிச்சை மையங்களை அகற்றாமல் இருந்தது மும்பையில் 2-வது கொரோனா அலையை எதிர்கொள்ள உதவியாக இருந்ததாக மாநகராட்சி கூறியுள்ளது.
3. செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 2,154 பேர் பாதிப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 2,154 பேர் பாதிப்புக்குள்ளானார்கள்.
4. கொரோனா வைரஸ் சூழல் படுமோசமாக செல்கிறது; பிரதமரும், சுகாதார துறை மந்திரியும் பொறுப்பேற்க மறுக்கிறார்கள்; ப.சிதம்பரம் சாடல்
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் சூழல் மோசத்திலிருந்து படுமோசமான நிலைக்கு சென்றுவிட்டது.
5. இந்தியாவில் ஒரே நாளில் 4.14 லட்சம் பேருக்கு கொரோனா; 3,915 பேர் பலி
இந்தியாவில் கொரோனா பரவல் தினமும் புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது. ஒரே நாளில் நேற்று 4.14 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.