தேசிய செய்திகள்

தமிழக சட்டசபை பாஜக தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் - மத்திய பார்வையாளராக கிஷன் ரெட்டி நியமனம் + "||" + Election of BJP leader for Tamil Nadu Assembly - Kishan Reddy appointed as Central Observer

தமிழக சட்டசபை பாஜக தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் - மத்திய பார்வையாளராக கிஷன் ரெட்டி நியமனம்

தமிழக சட்டசபை பாஜக தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் - மத்திய பார்வையாளராக கிஷன் ரெட்டி நியமனம்
தமிழக சட்டசபை பாஜக தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலை அக்கட்சியின் நாடாளுமன்ற வாரியம் நடத்த இருக்கிறது.
புதுடெல்லி,

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் 4 இடங்களை பா.ஜனதா கைப்பற்றியுள்ளது. இதனைத்தொடர்ந்து சட்டசபை பா.ஜனதா தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலை அக்கட்சியின் நாடாளுமன்ற வாரியம் நடத்த இருக்கிறது. இதை முன்னிட்டு தேர்தல் நடத்தும் மத்திய பார்வையாளராக மத்திய உள்துறை இணை மந்திரி கிஷன் ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார்.

இதைப்போல அசாம் சட்டசபைக்கு பா.ஜனதா தலைவரை தேர்வு செய்ய மத்திய தேர்தல் பார்வையாளராக மத்திய வேளாண்துறை மந்திரி நரேந்திர சிங் தோமர் மற்றும் கட்சியின் பொதுச்செயலாளர் அருண்சிங் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த தகவலை பொதுச்செயலாளர் அருண் சிங் நேற்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.