கோவா அரசு மருத்துவமனையில் கடந்த 4 நாட்களில் 74 கொரோனா நோயாளிகள் மரணம்


கோப்பு படம் (பிடிஐ
x
கோப்பு படம் (பிடிஐ
தினத்தந்தி 14 May 2021 10:57 AM GMT (Updated: 14 May 2021 10:57 AM GMT)

கோவா அரசு மருத்துவமனையில் இன்று காலை மட்டும் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

பனாஜி

கொரோனா வைரசின் 2-வது அலை பாதிப்பு இந்தியாவில் கடுமையாக உள்ளது. கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி வழிகின்றன. ஆக்சிஜன் தேவையும் மருத்துவமனைகளில் அதிகரித்துள்ளது. பல மாநிலங்கள் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவுவதாக குற்றம் சாட்டி வருகின்றன. 

இந்த நிலையில், கோவாவில் உள்ள  மிகப்பெரிய  அரசு மருத்துவமனையான கோவா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் அடுத்தடுத்து மரணம் அடைவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  

கடந்த 4 நாட்களில் மட்டும் 74 நோயாளிகள் இறந்துள்ளனர். நேற்று நள்ளிரவு 1 மணியில் இருந்து இன்று அதிகாலை 6 மணிக்குள் 13 பேர் மரணம் அடைந்துள்ளனர். ஆக்சிஜன் வழங்கும் அழுத்தம் குறைந்த காரணத்தால் உயிரிழப்பு ஏற்பட்டதாக குற்றம் சாட்டப்படுகிறது.  எனினும்,  மாநிலத்தில் ஆக்ஸிஜன் சப்ளை பற்றாக்குறை இல்லை என்று முதல்- மந்திரி பிரமோத் சாவந்த் கூறினார். 

இதுபற்றி மும்பை  உயர்நீதிமன்றத்தின் கோவா அமர்வில் மாநில அரசு விளக்கம் அளித்தது. ஆக்சிஜன் டிராலிகளை டிராக்டர்கள் மூலம் கொண்டு வந்து சிலிண்டர்களை இணைக்கும்போது சிக்கல் ஏற்பட்டதாக கூறியது. இப்படி கூறுவதை ஏற்க முடியாது என்று கூறிய நீதிமன்றம், இன்று இரவு 7 மணிக்குள் அறிக்கை தாக்கல் செய்யும்படி மருத்துவமனை நிர்வாகத்திற்கு உத்தரவிட்டது.


Next Story